சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

திருமணத்திற்கு பின்னும் ரஜினிக்கு தொடர்ந்த பிரச்னை .. பாலசந்தரிடம் சரணடைந்த லதா ரஜினிகாந்த்

கிட்டத்தட்ட 70களின் இறுதியில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வில்லனாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய இவர் பின் ஹீரோ ஆனார். ஆரம்ப காலங்களில் ரொம்பவும் கஷ்டப்பட்டு அவமானங்களை சந்தித்து தான் இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது கோலிவுட் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார்.

மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் இன்று ஆன்மீக வழியில் அவர் சென்றாலும் அவருடைய தொடக்க காலங்களில் கொஞ்சம் முரட்டுத்தனமாகவும் சர்ச்சைக்குரியவராகவும் தான் இருந்தார் இதை ரஜினியே தற்போது பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

Also Read: முதல் சந்திப்பிலேயே லதாவை திணறடித்த ரஜினி.. பிரச்சனைக்குப் பிறகும் கல்யாணத்திற்கு சம்மதிக்க இதுதான் காரணம்

ஒரு சாதாரண நடிகனாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு அடுத்தடுத்து வெற்றிகள் என்பது அவரே எதிர்பார்க்காத ஒன்றாக தான் இருந்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள், படப்பிடிப்புகள் என்றிருந்த ரஜினிகாந்துக்கு பில்லா திரைப்படத்தின் போது நரம்பு தளர்ச்சி சம்பந்தமான நோய் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அதன் பின்னர் தில்லு முல்லு திரைப்பட படப்பிடிப்பின் போது லதா ரஜினிகாந்த்தை சந்தித்து காதலில் விழுந்து திருமணமும் செய்து கொண்டார். ரஜினிகாந்த் திருமணத்திற்கு பின்னர் ஒரு நாள் திடீரென்று ரொம்ப ஆக்ரோஷமாக வீட்டில் இருந்த நிறைய பொருட்களை போட்டு உடைத்து, புகைப்படங்களை கூட உடைத்து இருக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய லதா ரஜினியின் குருநாதர் கே பாலச்சந்தருக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறார்.

Also Read:ரஜினியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் ஸ்டார் நடிகர்.. கமலின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் படம்

வீட்டிற்கு வந்து பார்த்த கே பாலச்சந்தருக்கு அந்த சம்பவம் ரொம்பவும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. எல்லா புகைப்படங்களையும் போட்டு உடைத்த ரஜினிகாந்த், கே பாலச்சந்தரின் புகைப்படத்தை மட்டும் உடைக்கவில்லையாம். அப்போது பாலச்சந்தர் ரஜினியிடம் என்னுடைய புகைப்படத்தை மட்டும் ஏன் உடைக்காமல் வைத்திருக்கிறாய் அதையும் போட்டு உடைத்துவிடு என்று சொல்லி இருக்கிறார். அப்போது ரஜினி என்னை ஏன் இப்படி பெரிய ஸ்டார் ஆக்கினீங்க சார் என்னால நிம்மதியாக இருக்க முடியவில்லை, ஒரு டீ கடைக்கு கூட போக முடியவில்லை என்று ரொம்பவே கோபமாக கத்தினாராம்.

அப்போது பாலச்சந்தர் ரஜினியிடம் நீ சினிமாவில் ஜெயித்து விட்டாய், பெரிய ஸ்டார் ஆக மாறிவிட்டாய், இந்த வெற்றியை அனுபவி, இந்த வாழ்க்கையை அனுபவி இப்படி எல்லாம் யோசிக்காதே என்று சொல்லி அட்வைஸ் செய்துவிட்டு போனாராம். ரஜினியின் புகழ் மற்றும் பணம் என்பது எப்போதுமே அவருக்கு கொடுக்கவில்லை என்பதை ஒரு சில மேடைகளில் அவரே மனம் திறந்து சொல்லி இருக்கிறார்.

Also Read: ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தலைவர்-170 அறிக்கை

- Advertisement -

Trending News