ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ப்ரியா படத்தில் ரஜினி ஹீரோயின் சுபத்ரா, இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? செம ஷாக்!

பிரியா என்ற திரைப்படம் 1978 ஆம் ஆண்டு சுஜாதாவின் நாவலைக் படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அஸ்னாஹமீத், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கப்பட்டது.

பிரியா திரைப்படம் மொழிபெயர்க்கப்பட்டு தெலுங்கிலும் 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபீஸ் பெற்றது. பிரியா படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா.

இவர் இசையமைத்த 50வது படம் பிரியா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ரஜினி, அஸ்னாஹமத் டூயட் பாடல் ‘என்னுயிர் நீதானே’ அப்போது பல முறை கேட்கும் பாடலாக இருந்தது.

அஸ்னாஹமீத் ப்ரியா திரைப்படத்தில் சுபத்ரா கதாபாத்திரத்தில் மலாய் இந்தியப் பெண்ணாக நடித்திருப்பார். அஸ்னாஹமீத் பிரியா திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்து பிறமொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது அவருக்கு 67 வயதாகிறது. தற்போது இவர் ட்ராமா, டெலி பிலிம் நடித்து வருகிறார்.

rajini-azna
rajini-azna

அப்துல் ஹமீத் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இவர்தான் பிரியா பட கதாநாயகி என பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News