நெட்டிசன்கள் தொல்லையால் அதிர்ச்சி முடிவெடுத்த சூப்பர் சிங்கர் பிரபலம்.. அவரே வெளியிட்டு இன்ஸ்டா பதிவு!

விதவிதமான புதிய ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குவதில் விஜய் டிவிக்கு நிகர் யாருமே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு நடனம், பாட்டு, சமையல், சிரிப்பு என அனைத்திற்கும் தனித்தனியாக ரியாலிட்டி ஷோக்களை நடத்தி மக்கள் மத்தியில் தனித்துவமான சேனலாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் முக்கியமான நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் தற்போது இந்நிகழ்ச்சியின் 8வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம், எஸ்பிபி சரண், பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அவரது குரலுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில் அவரது எலிமினேஷன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

benny-super-singer
benny-super-singer

மேலும் இது சர்ச்சையான நிலையில் நெட்டிசன்கள் பலரும் நடுவர்களை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த நடுவர் பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனி நான் சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட மாட்டேன்.

benny-insta
benny-insta

என்னால் அவ்வளவு வெறுப்பான கமெண்டுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் இதுவரை காட்டிய அத்தனை அன்புக்கும் நன்றி. நானும் ஒரு மனிதன் தான். போதும். நன்றி. நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் உங்களைப் பார்க்க மாட்டேன்” என பதிவிட்டுள்ளார். இவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -