விஜய் டிவியின் முக்கிய சீரியலை திருடி தொக்கா மாட்டிய சன் டிவி.. காப்பி அடிப்பதில் ஒரு நியாயம் வேண்டாமா?

எவ்வளவு நாள் தான் புதிய படங்களை போட்டு ஒப்பேத்துவது என சன் டிவி தற்போது விஜய் டிவியை பார்த்து ஒவ்வொரு விஷயங்களையும் காப்பியடிக்கும் செய்திதான் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பெற்றிருக்கும் சன் டிவி நிறுவனம் சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ஒரு சில முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை அப்படியே காப்பி செய்து சன் டிவியில் வேறு பெயரில் ஒளிபரப்பி வருகின்றனர்.

முன்னதாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அதேபோல் சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் குஷ்பு நடிப்பில் ஒரு சீரியல் ஒளிபரப்பானது.

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அளவுக்கு லட்சுமி ஸ்டோர்ஸ் வெற்றியை பெறவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் இன்ஸ்பிரேஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக பேசப்படும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை கலாய்க்கதவர்களே கிடையாது. ஆனாலும் விஜய் டிவியின் ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பெற்று வருகிறது. முக்கியமாக நாயகி கருப்பாக நடித்ததால் மக்களுக்கு சிம்பதி ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

bharathikannamma-vijaytv
bharathikannamma-vijaytv

அதை மட்டும் ஏன் விடுவானே என சன்டிவி தற்போது பாரதி கண்ணம்மா சீரியலை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு சுந்தரி என்ற பெயரில் புதிய சீரியலை தொடங்கியுள்ளது. வெளியில் நம்பர் ஒன் சேனல் என பீற்றிக்கொள்ளும் சன் டிவி நிறுவனம் இப்படி விஜய் டிவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் காப்பியடிப்பது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைபோல தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

sundari-suntv
sundari-suntv

இருந்தாலும் சுயமா யோசிச்சிருக்கலாம்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்