வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரவிக்கை இல்ல, முதல் மரியாதை ராதா போல் போட்டோ ஷூட் நடத்திய சுந்தரி.. நெட்டிசன்களை விளாசிய சம்பவம்

டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் சன் டிவியின் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கேப்ரில்லா சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் சமீபத்தில் மேலாடை அணியாமல் போட்டோ சூட் நடத்தி, அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மைம் கலைஞரான கேப்ரில்லா, நயன்தாரா நடித்த ஐரா உள்ளிட்ட சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இப்போது சீரியல்களிலும் மாடலிங்கிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கேப்ரில்லா சமீபத்தில் மேலாடை இல்லாமல் புடவை மட்டும் அணிந்தபடி போட்டோ ஷூட் நடத்தினார்.

Also Read: டி ஆர் பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்த ஒரே சீரியல்

அதனுடன் ‘சுருங்கப் போகும் தோலுக்கு ஓராயிரம் விமர்சனம். சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம்’ என கருத்து பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘தமிழோடு பண்பையும் ஒழுக்கத்தையும் காத்தோடு பறக்க விடுறா’ என கண்டபடி சோசியல் மீடியாவில் கழுவி கழுவி ஊற்றினார்கள்.

அதை பார்த்து கொந்தளித்த கேப்ரில்லா பதிலடி கொடுத்திருக்கிறார். ‘திறமைக்கும் உடலுக்கும் சுய விருப்பத்திற்கும் வித்தியாசம் இருப்பது அறிவில்லாதவர்களுக்கு புரியாது. இவர்களின் கருத்து எனக்கு வேடிக்கையே! எனது கவி பாட எனது நாவு போதுமானது, உடல் அவசியமல்ல என செந்தமிழில் விளாசி இருக்கிறார்.

Also Read: சுந்தரி, கண்ணம்மா நடித்துள்ள N4 படம் எப்படி?. அனல் பறக்கும் விமர்சனம் இதோ!

இப்படி சோசியல் மீடியாவில் நெட்டிசன்களுடன் சரிக்கு சரி மல்லுக்கட்டும் கேப்ரில்லா எதற்காக இப்படி சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டு ரணகளம் செய்கிறார் என ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலாடை அணியாமல் போட்டோ ஷூட் நடத்திய சுந்தரி

gaprilla-1-cinemapettai
gaprilla-1-cinemapettai
- Advertisement -

Trending News