சாகுறதுக்குள்ள இவர வெச்சு படம் எடுக்கணும்.. பலநாள் கனவுடன் காத்திருக்கும் சுந்தர் சி

காமெடி கலந்த படங்களை எடுத்து வெற்றி கண்டவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கத்தைக் காட்டிலும் நடிப்பிலும் பட்டையை கிளப்புவார். பெரும்பாலும் நவரச நாயகன் கார்த்திக், சுந்தர் சி கூட்டணியில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது கொஞ்சம் வித்தியாசமாக பேய் படங்களை காமெடி ஜானரில் எடுத்து வருகிறார்.

அந்தப் படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெறுகிறது. இந்நிலையில் சுந்தர் சி, என்னுடைய லைஃபில் ஒரே ஒரு ஃபீலிங் தான் என தனது கனவை பற்றி கூறியுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் படத்தை சுந்தர் சி இயக்கி வந்தார்.

அதே போல் உலக நாயகன் கமலஹாசனை வைத்து அன்பே சிவம் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் அப்போது வெற்றி பெறவில்லை என்றாலும் காலம் கடந்து பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் அஜித்துடன் இணைந்து உன்னை தேடி படத்தில் பணியாற்றி உள்ளார்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக உள்ள ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் என கிட்டத்தட்ட 3 நடிகர்களையும் வைத்து படம் இயக்கியுள்ளார். ஆனால் தளபதி விஜய்யை வைத்து ஒரு படம் கூட சுந்தர்சி இயக்கியது கிடையாது. மேலும் அப்போது விஜய்க்காக சுந்தர் சி கதை எழுதி இருந்தும் இவர்கள் இணைந்து பணியாற்றும் படியான சூழ்நிலை ஏற்படவில்லை.

மேலும், தற்போது வரை விஜய்யை வைத்து சுந்தர் சி ஆல் படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது மட்டும் நடந்தால் என் வாழ்வு முழுமை பெறும் என சுந்தர்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஜய்க்கு நிறைய ஹியூமர் சென்ஸ் உள்ளது. அதேபோல் சுந்தர் சி யின் படங்களும் நகைச்சுவையாக இருக்கும்.

இதனால் இவர்கள் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றினால் நன்றாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் தளபதி விஜய் தற்போது அதிகமாக புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். இதனால் சுந்தர் சியின் படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு குறைவுதான்.

Next Story

- Advertisement -