சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எதிர்நீச்சிலை விட ஜெட் வேகத்தில் பறக்கும் சன் டிவியின் புது சீரியல்.. அர்ச்சனாவுக்கு நாமம் போட போகும் சூர்யா

Sun Tv Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் சன் டிவியில் எக்கச்சக்கமான சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதிலும் பெண்களை மையமாக வைத்து குடும்பங்கள் கொண்டாடும் அளவிற்கு இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் வகையில் வித்தியாசமான கதையுடன் விறுவிறுப்பான காட்சிகளுடன் சீரியல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் முடிந்து போன எதிர்நீச்சல் சீரியலை விட தற்போது இந்த ஒரு சீரியல் ரொம்பவே சுவாரஸ்யமாகவும் பார்க்க ஆர்வமாகவும் இருக்கிறது என்று மக்கள் தொடர்ந்து விரும்பி பார்த்து வருகிறார்கள். அதனால் தான் ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் முதல் இடத்தை கெட்டியாக பிடித்து ஒய்யாரமான ஒரு இடத்தை பிடித்து விடும்.

அந்த சீரியல் வேறு எதுவும் இல்லை மூன்று முடிச்சு. துணிச்சலான நந்தினி எதற்கும் அஞ்சாத ஒரு கதாபாத்திரத்தில் அவருடைய கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் நந்தினியின் நடிப்பு பிரமாதமாக அமைந்திருக்கிறது. அதே மாதிரி சில காரணங்களால் அம்மாவை வெறுத்து வரும் சூர்யா, அப்பா பேச்சு கேட்டு அர்ச்சனாவை கல்யாணம் பண்ணுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அர்ச்சனா மற்றும் அவருடைய குடும்பம் பணக்கார புத்தியை காட்டும் விதமாக நந்தினியை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் சூர்யாவுக்கும் அர்ச்சனா மீது எந்தவித ஈர்ப்பும் இல்லாததால் அர்ச்சனா கழுத்தில் தாலி கட்டுவாரா என்ற எதிர்பார்ப்புடன் கதை கேள்விக்குறியாக அமைந்து வருகிறது. ஆனால் அதில் தான் மிகப்பெரிய ஒரு அதிரடியான விஷயமும் நடக்கப் போகிறது.

சூர்யா, அர்ச்சனா கழுத்தில் தாலி கட்டாமல் நந்தினியை தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்ளப் போகிறார். இதுதான் அர்ச்சனாவுக்கு விழும் மிகப்பெரிய அவமானமாக இருக்கப் போகிறது. இதனால் ஏமாந்து போன அர்ச்சனா, சூர்யா மற்றும் நந்தினியை பழி வாங்கும் விதமாக தொடர்ந்து அடுத்த கட்ட கதையாக நகர்ந்து வரும்.

ஆனால் சூர்யாவை கணவராக ஏற்று நந்தினி, சூர்யாவுக்கு இனி எந்த சிக்கலும் வராதபடி பக்க பலமாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சூர்யாவை நல்வழிப்படுத்தும் விதமாக மாற்றப்போகிறார். இப்படி இந்த சீரியல் விறுவிறுப்பான கதையுடன் நகர்ந்து வருவதால் மக்களின் ஃபேவரிட் சீரியலாக இடம் பிடித்திருக்கிறது.

- Advertisement -

Trending News