எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற அனைத்து சீரியல்களின் இயக்குனர்கள் எப்படி ஒரு சீரியலை எடுக்க வேண்டும் என்று எதிர்நீச்சல் நாடகத்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி சொல்லும் அளவிற்கு அதிக அளவில் பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரே நாடகம் நம்முடைய இயக்குனர் திருசெல்வம் இயக்கிய எதிர்நீச்சல் மட்டும் தான்.

ஆனால் இவர் இயக்கிய இந்த நாடகத்திற்கு முன்னதாகவே ஒரு பெரிய வெற்றி கொடுத்தது கோலங்கள் சீரியல். அதில் தேவயானி, தீபா வெங்கட் மற்றும் முக்கியமான ஒரு கேரக்டரில் தேவயானி நண்பராக நடித்தவர் இயக்குனர் திருச்செல்வம் அவர்கள். அதிலும் முக்கியமாக சொல்ல வேண்டியது ஒருவரை பற்றி. அந்த கேரக்டரையும் நம்மால் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க முடியாது.

Also read: நிஜத்திலும் நான் குணசேகரன் மாதிரி ஆளை சந்தித்து இருக்கிறேன்.. எதிர்நீச்சல் மருமகளின் உருக்கமான பேச்சு

இந்த நாடகத்தில் தேவயானியின் கடைசி தங்கையாக நடித்த ஸ்ரீவித்யா. அதாவது கேரக்டர் படி சொல்லனும் என்றால் ஆர்த்தி. இவர்தான் இப்பொழுது எதிர்நீச்சல் நாடகத்தின் வசனங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த நாடகம் இப்பொழுது டாப்ல போகுது என்றால் அதற்கு ஒரு காரணம் இவருடைய வசனங்கள் என்றே சொல்லலாம்.

இப்படி கோலங்கள் சீரியலில் நடித்த கேரக்டர்களை நம்மால் மறக்க முடியாமல் இருப்பதால்தான் 14 வருடங்களுக்கு பின் அதை மறுபடியும் பார்ட் 2 என்று வெளிவர இருக்கிறது. சமீபத்தில் சத்தியப்ரியா அதாவது குணசேகரனின் அம்மா அவர்களின் பிறந்தநாள் அன்று கோலங்கள் டீம் மறுபடியும் சந்தித்திருக்கிறார்கள். அதில் இயக்குனர் திருச்செல்வம் அவர்களிடம் கேட்கும் பொழுது, கூடிய விரைவில் வெளியாகும் அதுவும் சன் டிவியில் மட்டும் தான் டெலிகாஸ்ட் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆளு ஜான்சி ராணி தான்.. அப்பத்தாவின் சொத்தை ஆட்டை போட்ட செம ஸ்கெட்ச்

அத்துடன் அந்த நாடகத்திற்கான கதைகளையும் நான் தயார் செய்து வைத்திருக்கிறேன். அதனால் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற கோலங்கள் 2 உங்களின் ஆதரவுடன் கூடிய சீக்கிரத்தில் வெளிவரும் என்று கூறி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் நாடகத்தில் மறுபடியும் நடிக்கப் போகிறது நம்முடைய தேவயானி அவர்கள் தான்.

இவர் இப்படி சொன்னதிலிருந்து 90ஸ் காலத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் சீரியலையும் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி மட்டும் கோலங்கள் 2 வெளிவந்தால் மற்ற நாடகத்தின் இயக்குனர்கள் கெதி என்னதான் ஆகுமோ தெரியவில்லை.

Also read: நிலைமை ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு கோபி அங்கிள் .. கழுத்தை நெரித்த ராதிகா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்