விஜய் டிவியை ஒழித்துக்கட்ட சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 1000 எபிசோட் கடந்த இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என்றாலே விஜய் டிவி தான் நம்மில் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வரும். ஆனால் சீரியல் என்ற ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்திய சன் டிவி சீரியலுக்கு என தனி ரசிகர்கள் இன்று வரை உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இளம் ரசிகர்கள் இருக்கும் நிலையில், சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் ஒரு சீரியலுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். சன் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு டாப் சீரியலாக அமைந்த கோலங்கள் சீரியலை இயக்கிய இயக்குனர் திருசெல்வம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.

Also Read : பாரதிகண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்.. டிஆர்பி எகிறுதப்பா!

தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் பெண்களை சமையல் கட்டிலேயே வைத்து ஆணாதிக்கம் செய்யும் ஒரு வீட்டிலிருந்து எப்படி ஒரு பெண் தனது கனவுகளையும் , மற்ற பெண்களின் உரிமைகளையும் மீட்டெடுக்கிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம். அதற்கேற்றார் போல ஜனனி என்ற கதாபாத்திரத்தில் வலம் வரும் நடிகை மதுமிதாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் மருமகளாக வந்து, அங்குள்ள ஆண்களால் பல கொடுமைகளை அனுபவித்து அந்த வீட்டில் உள்ள மற்ற பெண்களுக்கு ஆதரவாகவும் அங்குள்ள ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் விதமாகவும் அந்த சீரியலில் அவர் நடித்து வருகிறார். சன் டிவி சீரியல் என்றாலே அழுகை, ஓவர் சென்டிமென்ட், ஓவர் மியூசிக் என தான் நம்மில் பலருக்கும் பரிச்சயம்.

Also Read : டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

ஆனால் இந்த சீரியலில் ஆண்களை அழ வைக்கும் அளவிற்கு பெண்கள் தங்களது உரிமைகளை பேசி வரும் வகையில் அமைந்துள்ளது. பெண்ணென்றால் கனவுகள் இருக்க கூடாது, அப்படியே இருந்தாலும் அவர்கள் ஆணுக்கு அடிமை தானா என முகத்தில் அறையும்படியான வசனங்கள் சக்கைபோடு போட்டு வருகிறது.

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களான ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே 2, பாக்யலக்ஷ்மி உள்ளிட்ட சீரியல்களை வாயில் போட்டு விழுங்கி டி.ஆர்.பியில் நம்பர் ஒன் இடத்தில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ரொம்பவும் எல்லை மீறி போறீங்க.. பிட்டு படத்தை மிஞ்சிய சன் டிவி சீரியல்!

- Advertisement -