வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நிறைமாத கர்ப்பிணியுடன் சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. 600 எபிசோடு தாண்டிய ஃபேவரிட் சீரியல்

Sun tv Serial: சன் டிவியில் எந்த சீரியல் வந்தாலும் அது மக்களிடம் பிரபலமாகிவிடும். அந்த அளவிற்கு சன் டிவியில் உள்ள நாடகத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்து தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அதனால் கதையை சரியான முறையில் தேர்ந்தெடுத்தும் அதில் நடிக்கும் கதாபாத்திரங்களை துல்லியமாக நடிக்க வைப்பதிலும் சன் டிவிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

அதனால் எக்கச்சக்கமான சீரியல்கள் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. அதே மாதிரி புது சீரியல்களும் வரிசை கட்டி காத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்த முக்கியமான ஒரு சீரியல் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. ஆரம்பத்தில் ஆஹோ ஓஹோ என மக்கள் கொண்டாடிய அந்த சீரியல் கடந்த இரண்டு மாதமாக கதை எதுவும் இல்லாததால் கொஞ்சம் துவண்டு போய்விட்டது.

இதனால் அந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வரலாம் என சன் டிவி முடிவு பண்ணி விட்டது. அந்த சீரியல் வேறு எதுவும் இல்லை விக்ரமின் நடிப்பிற்காக தொடர்ந்து பேர் ஆதரவு கொடுத்துட்டு வந்த இனியா சீரியல் தான். ஆலியா மானசா இனியா கேரக்டரிலும் ரிஷி, விக்ரம் கேரக்டரிலும் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்கள்.

தற்போது இனியா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வைத்து கதை நகர்ந்து வருகிறது. ஆனாலும் இனியாவிற்கு குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தையை அவருடைய அக்காவிற்கு கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்த குழந்தையை அக்கா மற்றும் இனியா பொக்கிஷமாக பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியுடன் இருக்கும் இனியா ஒட்டுமொத்த குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் காட்சிகளுடன் கிளைமேக்ஸ் நெருங்கி விட்டது என்று இணையத்தில் புகைப்படங்கள் வெளியாயிருக்கிறது. கிட்டத்தட்ட 600 எபிசோடு தாண்டி மக்களின் ஃபேவரிட் சீரியலாக இடம் பிடித்திருக்கும் இனியா சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. இதனை தொடர்ந்து புத்தம் புது ஒரு சீரியலை சன் டிவி அறிமுகப்படுத்தப் போகிறது.

- Advertisement -

Trending News