புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஞாயிற்றுக்கிழமையில் விஜய்யை வைத்து ஆட்டம் காட்டும் சன்டிவி.. இளைய தளபதியுடன் இப்படி ஒரு டீலா?

முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் சன் டிவி ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 ஆண்டு காலங்கள் நிறைவு பெற்றுள்ளது. மக்களிடையே சன் டிவிக்கு இருக்கும் வரவேற்பு இன்று வரை கொஞ்சம் கூட குறையவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அதன் தரம் தான்.

சிறியவர் முதல் பெரியவர் வரை கவரக்கூடிய நிகழ்ச்சிகளை கொடுத்து வருவது தான் இதனுடைய சிறப்பு. மேலும் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளும் இதில் அதிகமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் சீரியல் என்றாலே சன் டிவி தான் என்று சொல்லும் அளவுக்கு இல்லத்தரசிகளை சன் டிவி கவர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட தரமான நிகழ்ச்சிகளை கொடுத்து வருவதால் தான் சன் டிவி ரசிகர்களை தன்னுடைய பிடியில் வைத்துள்ளது. இப்பொழுது சமீப காலமாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே நடிகர் வஜய்யின் படம் மட்டும் தான் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதனால் சன் டிவியுடன் விஜய்க்கு ஏதோ டீல் இருக்கிறது என்றெல்லாம் பல கட்டுக்கதைகள் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் அது காரணம் கிடையாது. சமீபத்தில் சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் மற்றும் சென்சஸ் அனைத்தும் செக் செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி விஜய்யின் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டால் அவர்களுடைய டிஆர்பி ரேட்டிங் அதிக அளவில் ஏறி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் விஜய் திரைப்படம் ஒளிபரப்பானால் மக்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து மகிழ்கின்றனர். அதை தெரிந்து கொண்ட சன் டிவி தற்போது விஜய் படங்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

இதன் மூலம் சேனலுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. அந்த வகையில் விஜய் சன் டிவியின் லாபத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சர்க்கார், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு சன் டிவியுடன் ஒரு நல்ல நட்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News