சீரியலின் சிங்கமாக இருக்கும் சன் டிவி.. பூனையாக மாறிய விஜய் டிவி

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து பார்க்கிறார்களோ, அந்த சீரியல்களின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் வாரமும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி இணையத்தில் வைரலாகும். அந்தவகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தை சன் டிவியின் கயல் சீரியல் பிடித்துள்ளது.

இந்த சீரியல் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் கதாநாயகனாகவும், ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்த சைத்தன்யா கதாநாயகியின் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கயல் சீரியலில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இதைத்தொடர்ந்து சன்டிவியின் வானத்தைப்போல சீரியல் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை சன்டிவியின் சுந்தரி பெற்றுள்ளது. மேலும் நான்காவது இடம் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு கிடைத்துள்ளது. 5வது இடம் மீண்டும் சன் டிவியின் ரோஜா சீரியல் பெற்றுள்ளது.

6-வது இடம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு டாப் 3 இடங்களை அடுத்தடுத்து சன்டிவியின் சீரியல்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே விஜய் டிவியில் ஒரு சீரியல் கூட டாப் 3 இடத்தைப் பிடிக்கவில்லை. அந்த அளவிற்கு சன் டிவி மற்ற சேனல்களுக்கு கடும் போட்டியாக மாறிக்கொண்டிருக்கிறது.

எனவே இதனை மனதில் வைத்து புது புது நிகழ்ச்சிகளையும் சீரியல் செய்யும் அடுத்தடுத்து ஒளிபரப்பு செய்து விறுவிறுப்பை கூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மற்ற சேனல்கள் சன் டிவியை போட்டியாளராக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் ஏற்கனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தி சின்னத்திரை ரசிகர்களை தங்கள் வசம் ஈர்க்கவும் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்