சன் டிவியின் டிஆர்பியை ஏற்றிய ‘எதிர்நீச்சல்’ நாயகி நந்தினி.. வலி நிறைந்த ஹரிப்ரியாவின் சொந்த வாழ்க்கை

மெட்டிஒலி, கோலங்கள் நாடகத்திற்கு பிறகு நீண்ட வருடங்களாக சன் டிவியின் டிஆர்பி ரேட் ஏறாமலே இருந்தது. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த சீரியல்களும் இல்லை. இந்நிலையில் ப்ரைம் டைம் ரேட் மொத்தத்தையும் சன் டிவியே அள்ளிக்கொள்ளும் அளவிற்கு ‘எதிர்நீச்சல்’ சீரியல் போய்க் கொண்டிருக்கிறது. நேயர்கள் அனைவரையும் இந்த சீரியல் தன்னுடைய கைவசம் வைத்துக் கொண்டிருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலின் ஹீரோயினை விட, இரண்டாவது ஹீரோயினாக நடிக்கும் நந்தினிக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். ஏன் இவருடைய நடிப்புக்காக தான் அந்த சீரியலேயே பார்க்கின்றனர். இந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் கேரக்டரில் நடிப்பவர் பிரபல சின்னத்திரை நடிகை ஹரிப்பிரியாதான். எல்லோரையும் சிரிக்க வைக்கும் ஹரிப்பிரியாவின் வாழ்க்கை ரொம்பவும் வலி மிகுந்தது.

Also Read: அடேய் கோபி, சதிலீலாவதி பாக்குற மாதிரி இருக்கு.. கொஞ்சமாவது சொந்தமா யோசிங்கடா

ஹரிப்பிரியா சைக்காலஜி படித்துவிட்டு, விஸ்காமில் பட்டப்படிப்பு முடித்தவர். இயக்குனராக வேண்டும் என்பதே இவருடைய கனவு. ஆனால் இவருடைய நண்பர்களும், அம்மாவும் இவர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கின்றனர். அதன்படி ஹரிப்பிரியா விஜய் டிவியின் கனா காணும் காலங்களில் ஹரிப்பிரியா என்னும் கேரக்டரிலேயே நடித்தார். இவருக்கு ஜோடியாக ‘சத்யா’ சீரியல் புகழ் விஷ்ணு நடித்தார்.

ஹரிப்ரியாவை ரசிகர்களுக்கு பரிட்சையமாக தெரிய ஆரம்பித்தது ஜீ தமிழில் வெளியான ‘மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்’ என்னும் சீரியல் மூலமாக தான். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த விக்னேஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் கணவன், மனைவியாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

Also Read: இனியாவை பாக்கியாவிடம் இருந்து பிரித்த கோபி.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

கொரோனா ஊரடங்கின் போது இருவரும் டிக் டாக்கில் ஆக்டிவாக இருந்தனர். பின்னர் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இப்போது ஹரிப்ரியா தன்னுடைய குழந்தையுடன் தனியாக தான் வசித்து வருகிறார். இதற்கிடையில் சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அசாரை ஹரிப்ரியா திருமணம் செய்து கொள்ள போவதாக கூட வதந்திகள் எழுந்தன.

ஆனால் ஹரிப்ரியா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யாரும் கருத்து கூற வேண்டாம் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிட்டார். ஹரிப்ரியா இதுவரை சின்னத்திரையில் 20 சீரியல்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ‘எதிர்நீச்சல்’ சீரியல் இவருக்கு மக்களிடையே ஒரு நல்ல அடையாளத்தை வாங்கி கொடுத்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் ஹரிப்ரியா இப்போது நந்தினியாக மக்களை சிரிக்க வைத்து கொண்டிருக்கிறார்.

Also Read: அசிங்கப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. சக்களத்தி சண்டையை மிஞ்சும் மருமகள்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்