தளபதியை வைத்து டிஆர்பியை ஏற்றிய சன் டிவி.. கோட்டை விட்ட விஜய் டிவி

டிஆர்பி கிங் என்றாலே அது விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு தற்போது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மாஸ் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பொதுவாக சின்னத்திரை தொலைக்காட்சிகள் தங்களது டிஆர்பியை ஏற்றுவதற்காக பல யுக்திகளை கையாண்ட வருவார்கள்.

இப்போது நிறைய புது சீரியல்களை இறக்கி டிஆர்பியை எகிற செய்து முயற்சி செய்து வருகிறார்கள். இதில் முதன்மையில் இருப்பது எப்போதுமே சன் டிவி மற்றும் விஜய் டிவி தான். இந்த இரு தொலைக்காட்சிகள் இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மேலும் விஜய் டிவி தனது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ மூலம் டிஆர்பியை அதிகப்படுத்தி வருகிறது.

Also Read : பார்த்திபனாக மாறிய விஜய்.. இணையத்தில் லீக்கான லியோ சீக்ரெட்

அதேபோல் சன் டிவியில் எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. இதனால் சன் டிவியும், விஜய் டிவியும் விட்டுக் கொடுக்காமல் ஓரளவு டிஆர்பியை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் விஜய்யின் பிகில் படம் ஒளிபரப்பப்பட்டது. அட்லி இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் ரசிகர்கள் மத்தியில் அப்போது ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அதுமட்டும்இன்றி இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடித்திருந்தார்.

Also Read : 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்குவது உறுதி.. மிக முக்கிய தகவலால் ஆட்டம் கண்ட அரசியல் களம்

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்க பெண்ணே பாடலும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் சன் டிவியில் நேற்று இரவு பிகில் படத்தை அதிக ரசிகர்கள் பார்த்து கண்டு களித்துள்ளனர். இதனால் சன் டிவியின் டிஆர்பி எகிறி உள்ளது. அதாவது தொலைக்காட்சியில் விஜய் படம் வெளியானால் எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் விஜய்யின் சர்கார், மாஸ்டர், பைரவா, தெறி போன்ற படங்கள் டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கை பெற்றிருந்தது. அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு பிகில் படமும் அதிக ரேட்டிங் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் டிஆர்பி மான்ஸ்டர் விஜய் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இதனால் இந்த வார டிஆர்பிஐ விஜய் டிவி கோட்டை விட்டது.

Also Read : ரொமான்ஸுக்காக 15 மணி நேரம் தவம் கிடந்த இயக்குனர்.. பொறுப்பில்லாமல் தூங்கிய விஜய், த்ரிஷா

Next Story

- Advertisement -