சோழியன் குடுமி சும்மா ஆடுமா?. கலாநிதி கார் கொடுத்ததன் சூட்சமம்

Kalanithi Maran: கலாநிதியின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய லாபத்தை பெற்றிருக்கிறது. இந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக நேற்று ரஜினி, நெல்சன் ஆகியோருக்கு கலாநிதி மாறன் காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

அதுவும் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்று இரண்டு BMW கார்களைக் கொண்டு வந்த இதில் ஒன்றை சூப்பர் ஸ்டாரிடம் தேர்வு செய்ய கொடுத்திருந்தார் கலாநிதி மாறன். அதில் ஒரு கார் இரண்டரை கோடி மற்றொன்று ஒன்றரை கோடி. அதில் இரண்டரை கோடி மதிப்புள்ள கார் மின்சாரம் மூலம் ஓடக்கூடியது.

Also Read : ரஜினியை அடுத்த நெல்சனுக்கு காஸ்ட்லி காரை கொடுத்த கலாநிதி.. வைரலாகும் போட்டோ

ஆகையால் ரஜினி பெட்ரோல் மூலமாக ஓடக்கூடிய ஒன்றரை கோடி மதிப்புள்ள BMW X7 காரை தேர்வு செய்தார். அதேபோல் விலை மதிப்பு மிக்க கார்கள் பலவற்றை நெல்சன் இடம் தேர்வு செய்ய சொன்னார் கலாநிதி. அவரும் கிட்டத்தட்ட ஒரு கோடியே 40 லட்சம் மதிப்புமிக்க ஒரு காரை தேர்வு செய்தார். இவ்வாறு கலாநிதி பரிசுகளை வழங்க என்ன காரணம் என்பதை வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார்.

அதாவது சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்பதற்கு ஏற்ப இவ்வாறு சன் பிக்சர்ஸ் நிறுவனம் காரை வழங்குவதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. ஜெயிலர் படம் எதிர்பார்த்ததை விட பெத்த லாபம் கொடுத்திருக்கிறது. இந்த வசூல் மூலமாக கண்டிப்பாக சன் பிக்சர்ஸ் வரி கட்ட வேண்டும். அதை வரியாக கொடுப்பதற்கு பதிலாக கார் ஆக பரிசு கொடுத்தால் வரியை மிச்சம் படுத்தியது போல் இருக்கும்.

Also Read : வீட்டு வாசலில் ரஜினிக்கு காத்திருந்த காஸ்ட்லி கிஃப்ட்.. சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன், தலை சுற்ற வைக்கும் விலை

அதுமட்டுமின்றி வெளியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நல்ல பெயர் இருக்கும். அதனால் தான் இப்போது கலாநிதி மாறன் இது போன்ற கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதுவும் ஒரு நல்ல விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைக்காமல் இது போன்று பரிசு வழங்கினால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதே உத்வேகத்துடன் அடுத்த படத்திலும் பணியாற்றுவார்கள் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகம் படங்களில் நடிக்க விரும்ப மாட்டார் எனினும் சன் பிக்சர்ஸ் உடன் கண்டிப்பாக இன்னொரு படத்தில் இணைவார் என்பது உறுதியான ஒன்று.

Also Read : சும்மா இருக்கும் விஜய்யை சொறிஞ்சு விடும் கலாநிதி மாறன்.. ரஜினியை வச்சு வெறுப்பேற்றிய சம்பவம்

- Advertisement -