வீட்டு வாசலில் ரஜினிக்கு காத்திருந்த காஸ்ட்லி கிஃப்ட்.. சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன், தலை சுற்ற வைக்கும் விலை

Actor Rajini: இன்னும் என்னென்ன அலப்பறை தான் செய்யப் போகிறீர்களோ என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சன் பிக்சர்ஸ் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளிவந்த ஜெயிலர் உலக அளவில் 600 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் முத்துவேல் பாண்டியனின் அலப்பறை தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரஜினியை இப்படி ஆரவாரத்தோடு பார்த்ததில் குஷியாகி போன ரசிகர்கள் ஜெயிலருக்கு அமோக ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

Also read: ரஜினி போல் மறக்கடிக்கப்பட்ட சொந்த பெயர்.. மம்மூட்டியின் நிஜ பெயர் இதுதான்

இதனால் உச்சி குளிர்ந்து போன கலாநிதி மாறன் தற்போது ரஜினிக்கு ஒவ்வொரு சர்ப்ரைஸ் ஆக கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார். அதன்படி லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை செக்காக கொடுத்து சூப்பர் ஸ்டாரை சந்தோஷப்படுத்திய கலாநிதி மாறன் அடுத்த பரிசையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் ரஜினிக்காக விலை உயர்ந்த காஸ்ட்லி காரை கலாநிதி மாறன் பரிசளித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதை சன் பிக்சர்ஸ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தங்களுடைய சந்தோஷத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

Also read: வசூல் வேட்டையாடும் டைகர் முத்துவேல் பாண்டியன்.. மிரள வைக்கும் 3வது வார ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அதன்படி ரஜினியிடம் பல மாடல் கார்களை தயாரிப்பு தரப்பு காட்டி இருக்கின்றனர். அதில் அவர் BMW X7 காரை தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தக் காரின் விலை மட்டுமே 1.26 கோடி ஆகும். கேட்பவர்களை தலைசுற்ற வைக்கும் இந்த காரின் சாவியை கலாநிதி மாறன் ரஜினியிடம் ஒப்படைப்பது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

வீட்டு வாசலில் ரஜினிக்கு காத்திருந்த காஸ்ட்லி கிஃப்ட்

sun-pictures-gift
sun-pictures-gift

மேலும் சூப்பர் ஸ்டார் அந்த காரில் அமர்ந்து பார்க்கும் காட்சியும் வைரலாகி வருகிறது. இதிலிருந்து சன் பிக்சர்ஸ் எந்த அளவுக்கு உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இது இவர்களின் அடுத்த பிரம்மாண்ட கூட்டணிக்கு அஸ்திவாரமாகவும் அமைந்துள்ளது. ஆனால் இந்த வெற்றியில் இயக்குனருக்கும் முக்கிய பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனாலேயே இப்போது நெல்சனுக்கு என்ன கிஃப்ட் கிடைக்கும் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்

rajini-kalanithimaaran
rajini-kalanithimaaran
- Advertisement -