சன் குடும்ப விருதுகளின் மொத்த லிஸ்ட்.. ஃபேவரிட் கதாநாயகன், கதாநாயகி யார் தெரியுமா.?

சன் தொலைக்காட்சி கிட்டத்தட்ட 12 வருடங்களாக தங்கள் தொலைக்காட்சியில் பணியாற்றி வருபவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் சீரியல்கள் என்றாலே அது சன் டிவிதான். காலை 10 மணியில் தொடங்கி இரவு 11 மணி வரை ரசிகர்களை கவரும் விதத்தில் பல்வேறு அம்சங்கள் கொண்ட தொடர்களை ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் சன் குடும்பம் விருதுகள் 2022 பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது இதில் விருதுகளை வென்ற வெற்றியாளர்களை பார்க்கலாம். இதில் பிடித்த கதாநாயகன் என்ற விருதை ரோஜா தொடரின் சிபு சூரியன் பெற்றார். மேலும் பிடித்த கதாநாயகி என்ற பிரிவில் எல்லோருக்கும் ஃபேவரிட் ஆன சுந்தரி தொடரின் கதாநாயகி கேப்ரியல்லாவுக்கு கிடைத்தது.

இதற்கு அடுத்தபடியாக சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகளை சித்தி 2 தொடர் வருண் மற்றும் கயல் தொடர் சைத்ரா ரெட்டி பெற்றனர். இதைத்தொடர்ந்து சிறந்த ஜோடிக்கான விருதுகளை ரோஜா தொடர் அர்ஜுன் மற்றும் ரோஜா இருவரும் தட்டிச்சென்றனர். சிறந்த மாமியார்கான விருதை ரோஜா தொடர் கல்பனா பெற்றார்.

இந்த ஆண்டு புது வரவாக வந்த கயல் தொடரின் கதாநாயகன் சஞ்சீவ் நட்சத்திர நாயகனுக்கான விருதை வென்றார். மேலும் சிறந்த குடும்பம் என்ற விருதை மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் பெற்றது. சிறந்த தாய்க்கான விருதை அபியும் நானும் தொடரில் மீனா வென்றார்.

இதைத் தொடர்ந்த சிறந்த மருமகன் மற்றும் மருமகள்கான விருதை கண்ணானே கண்ணே தொடர் யுவா மற்றும் அன்பே வா பூமிகா ஆகியோர் பெற்றனர். மேலும் சிறந்த வில்லன் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் கயல் தொடர் தர்மலிங்கம் மற்றும் கண்ணான கண்ணே தொடர் மேனகா பெற்றனர்.

சிறந்த துணை நடிகர் மற்றும் நடிகை பிரிவில் சுந்தரி தொடர் அனு மற்றும் வானத்தைப்போல ராஜபாண்டி ஆகியோர் வென்றனர். சிறந்த இயக்குனருக்கான விருதுகளை இரண்டு இயக்குனர்கள் தட்டிச் சென்றுள்ளனர். அதாவது சுந்தரி தொடர் அழகர் மற்றும் கயல் தொடர் செல்வம் இருவரும் பெற்றனர்.

சிறந்த பல திறமையான நடிகர் என்ற விருதை பப்லு பிரித்திவிராஜ் பெற்றார். மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகை லதா பெற்றார். இவ்வாறு ஆடல், பாடல் உடன் சன் குடும்பம் விருதுகள் 2022 மிக விமர்சையாக அரங்கேறி இருந்தது. மேலும் விருதுகள் பெற்றவர்களுக்கு சினிமாபேட்டை சார்பாக வாழ்த்துக்கள்.