நடிகையை விவாகரத்து செய்து 2வது திருமணத்திற்கு ரெடியான நடிகர்.. சாபமிட்ட இயக்குனர்

ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த நடிகை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மீண்டும் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாக இருக்கும் நடிகரை இயக்குனர் ஒருவர் எக்கேடோ கெட்டுப்போ என சாபம் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சுமந்த் அக்கேனி. இவர் பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் சகோதரி மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நீண்ட காலமாக தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.

இவருக்கும் கீர்த்தி ரெட்டி என்ற நடிகைக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணமாகி அடுத்த சில வருடங்களிலேயே விவாகரத்தும் நடைபெற்றது. அதன்பிறகு இருவரும் தனித்தனியே அவர்களது பாதையில் சென்று விட்டனர்.

இந்நிலையில் சுமன் தற்போது தன்னுடன் நடித்த பவித்ரா என்பவருடன் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகி வருகிறார். இந்த தகவலை அறிந்த சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் வசைபாடியுள்ளது ரசிகர்களை டென்ஷனாக்கி உள்ளது.

ராம்கோபால் வர்மா இயக்கிய படத்தின் மூலம் அறிமுகமானவர் சுமந்த். அந்த உரிமையில் கொஞ்சம் ஓவராகவே பேசிவிட்டார் ராம்கோபால் வர்மா. அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இருவரும் ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் தானே, ஒரு முறை பட்டது பத்தலையா. எக்கேடோ கெட்டுப் போங்கள் என கூறியுள்ளார்.

தன்னை அறிமுகப்படுத்தியவர் தன் கல்யாணத்திற்கு ஆசை ஆசையாக வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்த்த சுமந்த்துக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ராம்கோபால் வர்மாவின் பதிவு இருந்தது.

sumanth-cinemapettai
sumanth-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்