வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இப்படி காட்டினால் தான் பட வாய்ப்பா.? தேவையில்லை என தூக்கி எறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் பெரும்பாலும் பேசும்படியாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிலும் முதண்மை வகிப்பவர் தனம் என்கிற கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா. தமிழ், மயைாளம் மற்றும் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவருக்கு பெரிய திரையில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்து போனது.

அப்படியாக கிடைத்த வாய்ப்புகளையும் புறந்தள்ளி விட்டார். 1980ல் பிறந்த சுஜிதாவிற்கு பிறந்த 45 நாட்களிலேயே பெரிய திரையில் தோன்றிட வாய்ப்பு கிடைத்தது அநத படத்தில் கே.ஆர்.விஜயாவின் பேத்தியாக நடித்திருந்தார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே சத்யராஜ், ரஜினி என உச்ச நட்சத்திரங்கள் பலரோடும் நடித்திருந்தார்.

பூவிழி வாசலிலே படத்தின் சின்ன சின்ன ரோசாப்பூவே பாடலை தமிழ் திரை ரசிகர்கள் யாரும் மறந்திட முடியாது. 5 மொழிகளில் வெளியான இப்படத்தில் எல்லா மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக சுஜிதாவே நடித்திருந்தார்.

இதற்காக 1987-88ல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி அவார்டையும் வென்றிருந்தார். சீரியல்கள் ஒரு புறம் இருந்தாலும் சின்னத்திரை உட்பட சில ரியாலிட்டி ஷோக்களின் வாயிலாக தனது திறமையை காட்டி வந்தார்.

நாயகியாக நடிப்பதற்கு சில வாய்ப்புகள் வந்தாலும் அதனை தவிர்தது விட்டார் கிளாமரை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை போலும். மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் அவ்வப்போது சிறு சிறு தோற்றங்களில் வநது சென்றார் கடைசியாக சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த தியா படத்தில் மருத்துவராக நடித்திருந்தார்.

தூர்தசனில் ஔிபரப்பான ஒரு பெண்ணின் கதை வாயிலாக சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார். தொடர்ந்து உறவுகள், சுயம்வரம், அக்கா தங்கை, திருவிளையாடல், பிருந்தாவனம் என வரிசையாக ஹிட் சீரியல்களை தந்தவருக்கு சன் டிவியல் ஔிபரப்பான என் கணவருக்காக என்கிற சீரியல் நல்ல பிரபலம் தேடி தந்தது.

இந்த சீரியலுக்காக நடித்த தருணத்தில் அம்மணி +2 மாணவியாம். அப்போதே நான்கு மொழி சீரியல்களில் மெயின் ரோவில் இருந்தவருக்கு இப்போது இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை லைம் லைட் தான்.

pandian-stores-sujitha-cinemapettai
pandian-stores-sujitha-cinemapettai

சஜிதாவின் கணவரும் ஒரு சீரியல் நடிகர் தானாம் சில காரணங்களுக்காக இப்போது பரோடக்சன் லைனில் இருந்து வருகிறார். எப்போதும் ஆன்லைனில் இருக்கும் சுஜிதா இப்போது யூடியூப் சேனல் ஒன்றும் வைத்து ரசிகர்களுக்கு தன்னைப்பற்றி தெரியாத பல்வேறு விடயங்களையும் தெளிவாக கூறி வருகிறார்.

- Advertisement -

Trending News