Suhasini : திருமணத்திற்கு ஜாதி, ஜாதகத்தை விட இதுதான் முக்கியம்.. சர்ச்சை கிளப்பிய சுகாசினியின் பேச்சு

நடிகை மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியான சுகாசினி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசிய விழிப்புணர்வு வீடியோ இப்போது பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. சுகாசினி இப்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

மேலும் பல பொதுவான நிகழ்ச்சியில் சுகாசினி கலந்து கொள்வதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் சர்வதேச தல்சீமியா நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் டாக்டர் ரேவதியுடன் கலந்து கொண்ட சுகாசினி செய்தியாளர்களிடம் சில விஷயங்களை பேசினார். அதாவது பெண்களுக்கு கர்ப்ப கால கட்டாய பரிசோதனைகளில் தலசீமியா தொடர்பான ரத்த பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

தலசீமியா பற்றி பேசிய சுகாசினி

மேலும் எனக்கும் குடும்பத்தால் பார்க்கப்பட்ட திருமணம் தான். இவ்வாறு வீட்டில் பார்க்கும் திருமணம், ஜாதகம், உயரம், எடை ஆகிய பொருத்தங்களை பார்த்து திருமணம் செய்வதை காட்டிலும் ரத்தப் பரிசோதனை செய்து திருமணம் செய்வது நல்லது என்று சுகாசினி கூறியிருக்கிறார்.

இது நடைமுறைக்கு சாத்தியமா என்பது கேள்வி குறிதான் என பலரும் சுகாசினி பேச்சுக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் தமிழக கலாச்சாரத்தை பொருத்தவரையில் பாரம்பரியமாக ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வருகிறார்கள்.

அறிவியல் ரீதியாக ரத்த பரிசோதனை செய்து திருமணம் செய்வது ஏற்புடையதாக இருந்தாலும் பலரும் இதை நடைமுறைக்கு கொண்டு வருவார்களா என்பது சந்தேகம் தான். மேலும் வருஷத்திற்கு இரண்டு முறை ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதையும் சுகாசினி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்