கொஞ்சநஞ்ச பேச்சா பேசினீங்க ஜீவா.. இப்படி மாமனாரிடம் மாட்டி தவிக்கும் பரிதாபம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது சுவாரஸ்யம் குறைந்தாலும் ஏதோ ஓர் கதையை கொண்டு நகர்ந்து வருகிறது. நல்லா இருந்த குடும்பத்தை தனித்தனியாக பிரித்து ஒவ்வொருவருடைய உண்மையான குணத்தை காட்டும் விதமாக ஐஸ்வர்யாவின் கேரக்டர் தற்போது எதிர்மறையாக மாறிக்கொண்டு பார்ப்பவர்களை எரிச்சல் ஊட்டுகிறது.

அடுத்ததாக ஜீவா, தன் அண்ணன் குடும்பத்துடன் ஒன்றாக இருந்தால் நமக்கு மரியாதை இல்லை சுயமாக முடிவெடுக்க முடியவில்லை என்பதால் அவரிடம் மனக்குறை முழுவதும் கொட்டிவிட்டு இனி நாங்கள் தனியாகவே வாழ்ந்து காட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு குடும்பத்தை விட்டு பிரிந்தார். ஆனால் அதற்குப் பிறகும் சுயமாக முடிவெடுக்காமல் மாமனாரை அண்டிப் பிழைக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

Also read: விஷ செடியாக இருக்கும் குணசேகரன் கதிர்.. கொட்டத்தை அடக்கும் ஜனனியின் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம்

மாமனார் வீட்லயாவது இவர் எதிர்பார்த்த ராஜ மரியாதை கிடைக்கும் என்றால் அது சாத்தியமாகுமா. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் என்னதான் மாமனார் வீடாக இருந்தாலும் அங்கேயும் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருக்கணும். அதை விட்டுவிட்டு, அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பேரும் புகழும் வாங்குனது எல்லாம் திடீரென்று நான் தான் எல்லாம் பண்ணுவேன் என்று நினைப்பதே பெரிய தவறு. இதில் அவரிடம் போய் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

எவ்வளவு அடிபட்டாலும் திருந்தவே மாட்டார் ஜீவா. அண்ணனை பார்த்து கொஞ்சநஞ்ச பேச்சா பேசினீங்க, சரி பேசின பிறகாவது மீனாவை கூப்பிட்டு தனியாக வாழ்ந்து காட்டியிருந்தால் அது கெத்தாக இருந்திருக்கும். ஆனால் மாமனாரிடம் தற்போது மாட்டிக்கொண்டு முழிக்கும் படியாக பரிதாபத்துக்கு ஆளாகி விட்டார். அதாவது மாமனார் வீட்டில் தங்கியிருக்கும் ஜீவா தற்போது படிப்படியாக ஒவ்வொரு அவமானங்களையும் சந்தித்து வருகிறார்.

Also read: மூர்த்தியின் அருமையை புரிந்து கொள்ளும் ஜீவா.. அண்ணன் அண்ணியை விட்டுக் கொடுக்காத கதிர்

ஆரம்பத்தில் மாமனார் எல்லா கம்பெனி வேலையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் அதற்கு எல்லாத்துக்கும் நீங்கள் தான் பொறுப்பு என்று சொன்னார். இதை நம்பி ஜீவாவும் ஒவ்வொரு முடிவையும் எடுக்கும் பொழுது அதை செய்ய விடாமல் ஜனார்த்தன் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை மட்டும் செய்து வந்தார். இதுவே ஜீவாக்கு பெரிய அவமானமாக இருந்தது.

இருந்தாலும் இதெல்லாம் பொறுத்துக் கொண்ட ஜீவா, தற்போது கயல் விஷயத்தையும் ஜனார்த்தன் மூக்கை நுழைப்பதால் ஜீவா கோபப்பட்டு மாமனாரிடம் என்னோட குழந்தைக்கு என்னைய சரியான அப்பாவாக இருக்க விடுங்க. என்னுடைய பாப்பாக்கு என்ன பண்ணனும் ஏது செய்யனும் என்று நான் முடிவு எடுத்துக் கொள்கிறேன். அதில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று மனம் திறந்து எல்லா விஷயத்தையும் கொட்டி விடுகிறார். இனிமேலாவது இவர் திருந்தி ஒன்னு அண்ணன் கூட போய் சேர்ந்து வாழணும். இல்லையென்றால் சுயமாக தனிக்குடித்தனம் போயி வாழ்க்கையை ஆரம்பித்து ஜெயித்துக் காட்டணும். அப்பொழுது தான் கொஞ்சநஞ்ச மரியாதையும் மிஞ்சும்.

Also read: எல்லையே மீறிய கதிர்.. அவமானப்பட்ட ஞானம், சக்தியை காப்பாற்றிய கௌதம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்