பிரபல நடிகையை துரத்தி துரத்தி காதலித்த நடிகர் சுதாகர்.. கடைசிவரை சேர முடியாமல் போன சோகம்

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுதாகர். அதன் பிறகு மாந்தோப்புக்கிளியே, நிறம் மாறாத பூக்கள் மற்றும் சுவரில்லாத சித்திரம் போன்ற பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

சுதாகர் ரஜினி கமலுக்கு இணையாக தனக்கான ரசிகர்களை வைத்து இருந்தார். அதனால் பல இயக்குனர்களும் சுதாகர் வைத்து பல படங்களை இயக்கினர். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வந்தும் ஒரு சில படங்கள் தோல்வியடைந்ததால் அதன்பிறகு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மேலும் கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா விட்டு சிறிது காலம் விலகி இருந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களை தயாரித்து வெளியிட்டு இருந்தார். சுதாகர் மற்றும் ஸ்ரீபிரியா இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதனால் இவர்கள் இருவரும் படங்களில் இணைந்து நடித்தனர்.

sri priya
sri priya

ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அந்த காதல் முடிவுக்கு வந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் சுதாகர் ஸ்ரீபிரியாவை உருகி உருகி காதலித்ததாகவும். ஆனால் ஒரு சில காரணங்களால் இவர்கள் இருவரும் இணையவில்லை எனவும் கூறியுள்ளார். அப்போது சுதாகர்ருடன் நடிப்பதற்கு ஏகப்பட்ட நடிகைகள் ஆர்வமாக இருந்தார். அதனால் சுதாகரும் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என கூறியுள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் அழகுமீனாக்கு கணவனாக நடித்திருப்பார். தற்போது வரை ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் காலப்போக்கில் அந்த ஆசை இல்லாமல் போனது. அதனால் சுதாகர் சினிமாவில் பெரிய அளவில் நடிப்பதற்கு கவனம் செலுத்தவில்லை என கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்