கீர்த்தி சுரேஷ் மீது கடும் கோபத்தில் சுதா கொங்கரா.. கே ஜி எஃப் தயாரிப்பாளருக்கே இப்படி ஒரு சோதனையா!

கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கச்சியாக நடித்த பிறகு எந்த படமும் சரியாக அமையாமல் கடைசியாக சாணி காகிதம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெளியிடாமல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஒரு நேரத்தில் பிஸியான நடிகையாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த இவர் தற்போது சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லோலபட்டு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ரகு தாத்தா என்ற படத்தில் கமிட் ஆகிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இழந்த வாய்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக ஈடுபாட்டுடன் நடித்து வந்தார். இப்படத்தை சுனில் என்பவர் இயக்குகிறார். இவர் யார் என்றால் பேமிலி மேன் வெப் சீரியஸ் இன் ரைட்டர். மேலும் இதில் சுதா கொங்காரா எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் ஆக இருக்கிறார்.

Also read: வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. செம க்யூட்டான புகைப்படங்கள்

அத்துடன் இந்த படத்தை தயாரிப்பது கேஜிஎஃப், காந்தாரா போன்ற வெற்றி படங்களை கொடுத்த நிறுவனம் கொம்பாலையா பிலிம்ஸ். அதனாலேயே இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது சூட்டிங் ஸ்பாட்டில் இந்த படத்தின் இயக்குனருக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் சில பிரச்சனை வந்திருக்கிறது.

இதனால் இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது. அடுத்தபடியாக முதல் செடியுலை முடித்துக் கொடுத்த கீர்த்தி சுரேஷ் இரண்டாவது செடியுலுக்காக கால் சீட் கொடுக்காமல் படக்குழுவினரை அலையவிட்டு வேடிக்கை பார்க்கிறார். இதையும் தாண்டி அவர்கள் கீர்த்தியிடம் கேட்டபோது ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார்.

Also read: தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லையா.?காரணம் கேட்டு அதிர்ந்து போன கோலிவுட்

இதனால் சுதா கொங்காரா, கீர்த்தி சுரேஷ் மேல் அதிக கடுப்பில் இருந்து வருகிறார். பொதுவாகவே சுதா கொங்காரா பற்றி சூர்யா மேடையில் பேசும்போதெல்லாம் மிகவும் பெருமையாகவும் நல்ல ஒரு இயக்குனர் என்றும் நிறைய இடத்தில் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கையில் அவரையே இந்த மாதிரி கீர்த்தி சுரேஷ் அலைக்கழிக்க செய்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்.

இவர்கள் எல்லாத்தையும் விட இந்த படத்தின் தயாரிப்பாளரான கொம்பாலையா பிலிம்ஸ் தான் ரொம்பவும் அவதிப்பட்டு வருகிறாராம். இந்த  நிறுவனம் தொடர்ந்து வெற்றி படத்தை கொடுத்த பின்பு இந்த படத்திலும் வெற்றியை பார்க்க வேண்டும் என்று இருந்த நிலையில் அதைக் கெடுக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் நடவடிக்கை இருக்கிறது.

Also read: அழகில் கீர்த்தி சுரேஷை ஓரம்கட்டிய அவரது அம்மா.. வைரலாகும் 3 தலைமுறை புகைப்படம்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்