Photos | புகைப்படங்கள்
வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. செம க்யூட்டான புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளதால் வருகிற தீபாவளி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்து வருகிறார். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் சாணி காகிதம் எனும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சமீபகாலமாக நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக உள்ளனர் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பது மேலும் வித்யாசமான புகை படங்களை வெளியிடுவது என வாடிக்கையாக வைத்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் எந்த ஊர் சென்றாலும் புகைப்படம் எடுத்து வெளியிடுவார்.

keerthy suresh
தற்போது கீர்த்தி சுரேஷ் அவரது ஓணம் பண்டிகையின் போது எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சேலையுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் அழகாக இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர். மேலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவர் வளர்த்துவரும் நாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
