வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சூனியக் கிழவியாக மாறும் தனத்தின் அம்மா.. இரண்டாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

விஜய் டிவியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் இன்பங்கள் துன்பங்கள் பற்றிய யதார்த்தமான கதைக்களத்தை கொண்டதாக உள்ளது இந்த நெடுந்தொடர். கடந்த இரண்டு மாதங்களாகவே பல பிரச்சினைகளையும் குழப்பங்களையும் சந்தித்து சற்று சோகத்திலேயே சென்றுகொண்டிருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

கண்ணனின் காதல் திருமணத்தால் குடும்பமே மனமுடைந்து வருத்தத்தில் இருக்கும் போது மேலும் ஒரு அதிர்ச்சியாக மீனாட்சி அம்மா இறந்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வாரமாக தான் நீண்ட ஆண்டுகளுக்கு குழந்தையில்லாமல் இருந்த தனம், மூர்த்திக்கு ஆண் குழந்தை பிறந்து சீரியலே விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் ஓடியது.

இந்நிலையில் கயல் மற்றும் தனத்தின் குழந்தைகளால் வீட்டில் சண்டை துவங்கியுள்ளது. மீனா புது குழந்தையின் வருகையால் தன் குழந்தை கயல் ஒதுக்கப்படுவதாக வருத்தப்படுகிறார். மேலும் இதையொட்டி வீட்டில் பல சண்டைகளும் வருகிறது. அதிலும் தனத்தின் அம்மா சூனிய கிழவியாக மாறி மேலும் சண்டைகள் உருவாக காரணமாகிறார்.

இந்நிலையில் குடும்பமே கோலாகலமாக இணைந்து தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்ட தயாராகிவருகிறது. அப்பொழுது மீண்டும் குழந்தைகளை வைத்து ஒரு புதிய சண்டை வெடிக்க உள்ளது. மீனா தனத்தின் குழந்தையை பரம்பரை தொட்டிலில் போட தொட்டிலை பரண் மேல் இருந்து எடுக்க ஜீவாவிடம் சொல்லுகிறாள்.

அப்பொழுது தனத்தின் அம்மா என் பேரன் இந்த பழைய தொட்டிலில் படுக்க மாட்டான்.அவன் தாய்மாமன் சந்தன கட்டையில் தொட்டில் செய்து எடுத்து வருவான் என பந்தாவாக சொல்லிவிட்டுப் போகிறார். இதனால் செம்ம காண்டான மீனா ஜீவாவிடம், கயலுக்காக எங்கப்பா புது தொட்டில் கொண்டு வரேன்னு சொன்னாங்க, ஆனா நீங்க யாரும் விடல பரம்பரை தொட்டிலில் தான் போட வேண்டும் என்று சொன்னீர்கள்.

pandiyan-store-dhanam-mom
pandiyan-store-dhanam-mom

ஆனா இப்ப இவர்கள் சொன்னதை மட்டும் செய்யப் போகிறீர்கள். ஏன் இப்படி என் குழந்தைக்கும், தன அக்காவின் குழந்தைக்கும் ஓரவஞ்சனை செய்கிறீர்கள் என்று மீண்டும் கலகத்தைத் தொடங்கினார். இனி என்னென்ன குழப்பங்கள் ஏற்பட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News