சிம்பு என் தம்பி மாதிரின்னு சொல்லிட்டு பெரிய ஆப்பாக சொருகிய தயாரிப்பாளர்.. அந்தரத்தில் தொங்கும் எஸ்டிஆர் 48

Actor Simbu: சிம்புவுக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ என்று ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு சமீப காலமாக பல சர்ச்சைகளில் அவர் சிக்கி வருகிறார். தன் சேட்டை எல்லாம் குறைத்துக் கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி நல்ல பிள்ளையாக வலம் வந்த சிம்பு கமல் தயாரிப்பில் உருவாகும் எஸ்டிஆர் 48 படத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் வேளையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புது பிரச்சனை ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இதனால் எஸ்டிஆர் 48 அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

Also read: சிம்புவிற்கே டஃப் கொடுத்த அக்கட தேச நடிகர்.. ஜெயிலருக்கு இணையாய் பார்க்கப்படும் நரசிம்மன்

அதாவது சிம்பு, ஐசரி கணேஷ் தயாரிப்பில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகி இருந்தது அனைவருக்கும் தெரியும். அதற்காக தயாரிப்பு தரப்பில் இருந்து அவருக்கு 4.50 கோடி கொடுத்து ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது. ஆனால் சிம்பு சொன்னபடி அந்த படத்தில் நடிக்கவில்லை.

இதனால் கடுப்பான தயாரிப்பாளர் நடிகர் சங்கத்திடம் புகார் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும் சரியான பலன் கிடைக்கவில்லை. இப்படி விஸ்வரூபம் எடுத்த இந்த பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஐசரி கணேஷ் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என திடீரென ஒரு பேட்டி கொடுத்திருந்தார். மேலும் இது அண்ணன், தம்பிகளுக்குள் வரும் சிறு பிரச்சனை தான்.

Also read: அஜால் குஜால் ராஜ வாழ்க்கை வாழும் 5 இளசுகள்.. சிம்பு புரோவை மிஞ்சும் அதர்வா அண்ட் கோ

அதை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் இந்த பிரச்சனை ஒரு வழியாக முடிந்தது என்றும் விரைவில் எஸ் டி ஆர் 48 தொடங்கப்படும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் நம்ப வைத்து கழுத்தறுத்த கதையாக இப்போது ஐசரி கணேஷ் சிம்புவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

அதில் சிம்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதான் இப்போது திரை உலக வட்டாரத்தில் பெரும் புயலை வீசிக்கொண்டிருக்கிறது. மேலும் தம்பி என்று சொல்லிவிட்டு இப்படி ஒரு ஆப்பு வைத்து விட்டாரே ஐசரி கணேஷ் என்ற கருத்தும் எழுந்து வருகிறது. இதனால் எஸ்டிஆர் 48 நிலை தான் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

Also read: தம்பி விளையாட்டா சொன்னத மொத்தமா நம்பிய சீமான் அண்ணன்.. முழு முக்காடு போட்டுட்டு ஓடிய சிம்பு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்