சிம்புவிற்கே டஃப் கொடுத்த அக்கட தேச நடிகர்.. ஜெயிலருக்கு இணையாய் பார்க்கப்படும் நரசிம்மன்

Actor Simbu: சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டைய கிளப்பி வரும் படம் தான் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிக்கு நிகராய் பார்க்கப்படும் நரசிம்மன் கதாபாத்திரம் ஏற்று நடித்த நடிகர், பத்து தல சிம்புவிற்கு டஃப் கொடுத்து வருகிறார். இவற்றைப் பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

நெல்சன் இயக்கத்தில், பல பிரபலங்கள் இணைந்து வெற்றி கண்ட ஜெயிலர் படத்தில், அக்கட தேச நடிகர் ஆன சிவராஜ்குமாரை மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாது கன்னட மொழி மக்களாலும் ரசிக்கப்பட்டு வரும் இவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

Also Read: தர லோக்கலான கதாபாத்திரத்திற்கு பெயர் போன 6 வில்லன்கள்.. தனுசுக்கே தண்ணி காட்டிய விநாயகன்

மேலும் படத்தில் கொஞ்ச காட்சிகளில் இடம் பெற்றிருந்தாலும், ரஜினிக்கு சமமாய் நரசிம்மன் கதாபாத்திரம் இருப்பதாகவும் கொண்டாடப்பட்டு வருகிறார். அவ்வாறு ரசிகர்களிடையே பெயர் பெற்ற சிவராஜ்குமார் ஏற்கனவே மேற்கொண்ட மஃப்டி படத்தை தற்பொழுது தேடி தேடி பார்த்து வருகின்றனர்.

கன்னட மொழி படமாய் வெளிவந்த இப்படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. அவ்வாறு சிம்பு நடிப்பில் வெளிவந்த இப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடிய மக்கள் தற்பொழுது சிம்புவை கலாய்த்து வருகின்றனர். கேங்ஸ்டராய் சிம்புவின் கம் பேக் படமான பத்து தல சிவராஜ்குமார் நடித்த ரீமேக் படம் ஆகும்.

Also Read: அங்கீகாரம் கிடைக்காத 5 பெண் இசையமைப்பாளர்கள்.. தனுஷ் கூட்டணியில் வெற்றி கண்ட கண்ணழகா பாடல்

ஜெயிலரில் ரஜினிக்கு நிகரான கதாபாத்திரம் ஏற்று தெறிக்கவிட்ட பிறகு, தமிழில் தற்போது சிவராஜ்குமாரின் மார்க்கெட் உயர்ந்து காணப்பட்டு வருகிறது. ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் ஆன இவர் இக்கதாபாத்திரத்தை கொண்டு ஸ்கோர் செய்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

மேலும் இப்பட வெற்றியை கொண்டு தன் அடுத்த கட்ட படங்களை தமிழில் மேற்கொண்டு பிசியாக இருந்து வருகிறார் சிவராஜ்குமார். தமிழில் இவர் ஏற்கும் கதாபாத்திரம் தற்பொழுது இளம் நடிகர்களுக்கு சவாலாய் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள 8 படங்கள்.. தியேட்டரில் சோடைபோன பீட்சா 3

- Advertisement -