200 தொகுதிகளுக்கு டார்கெட் வைத்த ஸ்டாலின், சுக்கு நூறாக உடைக்க தளபதி எடுக்கும் வியூகம்.. சம்பவம் செய்ய ரெடி

TVK and DMK: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி ஜெயித்திருந்தாலும் தமிழ்நாட்டில் எங்களை மிஞ்ச யாரும் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப ஸ்டாலின் கட்சியாக இருக்கும் DMK வெற்றி பெற்றுவிட்டது. அதுவும் போட்டியிட்ட 40 தொகுதியிலும் அவர்கள் தான் முன்னிலை வகித்திருக்கிறார்கள் என்று சொல்வதற்கு ஏற்ப மற்றவர்களை யாரும் உள்ளே விடாமல் ஜெயித்துக் காட்டி இருக்கிறார்கள்.

இதனால் அடுத்து 2026 ஆம் ஆண்டு வரப்போகிற சட்டமன்றத் தேர்தலிலும் எங்களுடைய ஆட்சி தான் நடக்கும். அதற்கு நாம்தான் வெல்ல வேண்டும் என்று மு க ஸ்டாலின் அவர்களுடைய தொண்டர்களுக்கு உரைக்க சொல்லி இருக்கிறார். இப்படி ஆணித்தரமாக அவர் சொன்னதற்கு முக்கிய காரணம் இப்பொழுது போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றதுதான்.

கமுக்கமாக இருந்து காய் நகர்த்தும் தளபதி விஜய்

ஆனால் இதற்கு பதிலடி கூறும் விதமாக இணையத்தில் தளபதி எடுக்க போகும் வியூகம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது இப்பொழுது DMK கட்சி ஜெயித்ததற்கு முக்கிய காரணம் அவர்களுடன் போட்டி போட வலுவான கட்சி எதுவும் இல்லாததால் தான். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. அதனால் பாஜாகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வேறு வழி இல்லாமல் ஓட்டு போட்டிருக்கிறார்கள்.

இதனால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் DMK எதிராக TVK கட்சியின் சார்பாக விஜய் நிற்கும் பொழுது கண்டிப்பாக வெற்றி TVK -க்கு கிடைக்கும் என்று ஆணித்தரமான விஷயங்களை முன் வைத்து இணையத்தில் வைரலாகி கொண்டு போகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பிறகு வலுவான கட்சியை தமிழ்நாடு சந்திக்கப் போகிறது.

இதனால் இனியும் மக்களை ஏமாற விடமாட்டோம், நீங்கள் நினைப்பது நடக்காது நடக்க விடமாட்டோம் என்று மு க ஸ்டாலினுக்கு எதிராக பல எதிர்ப்பு கருத்துக்கள் வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் மு க ஸ்டாலின் இந்த மாதிரி அவருடைய நம்பிக்கையை தெரிவித்தாலும் இன்னொரு பக்கம் கமுக்கமாக இருந்து விஜய் அவருடைய கட்சியை வெற்றி பெறுவதற்கான பல வியூகங்களை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் மாணவ மாணவர்களுக்கு ஊக்குவித்து பரிசுகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார். அத்துடன் பசி இல்லா தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும் என்று அவ்வப்போது உணவு அளித்து வருகிறார். இன்னும் இதை முற்றிலுமாக போக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் கல்யாண மண்டப பக்கத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வைத்து குழு அமைக்கப் போகிறார்கள்.

அதன்மூலம் கல்யாண மண்டபத்தில் மீதமுள்ள சாப்பாடுகளை அவர்கள் சேகரித்து முதியோர் மற்றும் வறுமையில் வாடுபவர்களுக்கு உணவளிக்க திட்டத்தை மேற்கொள்ள போகிறார்கள். இப்படி பல விஷயங்களை நுணுக்கமாக பார்த்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கொடியை நாட்ட சம்பவத்தை தயார் செய்து கொண்டு வருகிறார் தளபதி விஜய்.

TVK கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வரும் தளபதி

Next Story

- Advertisement -