பாத்ரூமில் கட்டி உருண்ட பாரதி கண்ணம்மா.. ஒர்க் அவுட் ஆன சௌந்தர்யாவின் பிளான்!

விஜய் டிவியின் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது ரசிகர்களுக்கு பிடித்தமான காதல் ட்ராக்கை ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் எட்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்த பாரதி கண்ணம்மா தற்போது வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றம் அணுகியபோது, ஆறு மாதம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்த பின்புதான் விவாகரத்து வழங்க முடியும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பிறகு தற்போது பாரதி, கண்ணம்மா வீட்டில் ஆறு மாதம் தங்க முடிவெடுத்துள்ளார்.

கண்ணம்மாவின் குழந்தை பாரதி யார்? என்று கேட்டால் என்ற காரணத்திற்காகவும், பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கிடையே நெருக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும்,  கண்ணம்மாவின் மகள் லட்சுமியை சௌந்தர்யா தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

ஆகையால் ஒரே வீட்டில் இருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்குமிடையே நெருக்கம் கூடிக் கொண்டே செல்கிறது. அத்துடன் நேற்றைய நிகழ்ச்சியில் கண்ணம்மா பாத்ரூம் கழுவுவதற்காக பினாயில் ஊற்றி உள்ளார். அதை கவனிக்காத பாரதி பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்.

அவரைத் தூக்கிச் சென்ற கண்ணம்மா, பாரதியை தூக்குவதற்கு பதில் அவர் மீது விழுந்த ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆனது. பாரதிகண்ணம்மா சீரியலில் இந்த நிலைமை நீடித்தால் நீதிமன்றம் கொடுத்த ஆறு மாதம் தேவையே இல்லை ஆறு நாளில் பாரதி, கண்ணம்மாவை புரிந்து கொண்டு இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கி விடுவர்.

அத்துடன் வில்லியான வெண்பா தப்போது ஜெயிலில் இருப்பதால், பாரதிக்கு ஏற்றிவிட யாரும் இல்லாத இந்த சமயத்தில் பாரதி, கண்ணம்மாவை புரிந்துகொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது சீரியலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்