திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பாரதி விவாகரத்து கேட்டதை போட்டுக்கொடுத்த அஞ்சலியின் அம்மா.. ருத்ர தாண்டவம் ஆடும் சௌந்தர்யா!

விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் இல் பாரதியை விவாகரத்து செய்வது பற்றி கண்ணம்மாவிடம் பேசி விட்டு வரும் வழியில் சௌந்தர்யா கண்ணில் சிக்கிவிட்டார் அஞ்சலி அம்மா பாக்யா. சௌந்தர்யா பாக்யாவின் மீது சந்தேகப்பட்டு இவர் ஏதோ மறைக்கிறார் என்பதை கண்டுபிடித்து விட்டார். பாக்கியாவிடம் எங்கு சென்று வருகிறீர்கள் என்று கேட்க உறவினர் வீட்டுக்கு என்று பங்கமாய் பொய் சொல்கிறார்.

பிறகு கையில் சாப்பாடு வைத்திருப்பதைப் பார்த்த சௌந்தர்யா என்ன இது என பாக்யா விடம் வினவினார்.கறி குழம்பு என பாக்கிய சொல்ல, இங்க தாங்க என அதை வாங்கிப் பார்த்த சௌந்தர்யா இது கண்ணம்மா செய்தது என்பதை கண்டுபிடித்தார். கறி குழம்பால் வசமாக மாட்டிய பாக்கியா திருதிருவென முழித்தார்.

ஏன் என்னிடம் கண்ணம்மாவை பார்த்துவிட்டு வருவதை மறைத்தீர்கள் என கேள்வியால் பாக்யாவை மடக்க அவரும் உண்மையை உளறி விட்டார். பாரதி தம்பி கண்ணமாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுத்தர உதவினால் 1 கோடி தருவதாகவும், கடன் பிரச்சினையால்தான் இதற்கு தான் ஒத்துக் கொண்டதாகவும் ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன சௌந்தர்யா கண்ணம்மா இதற்கு என்ன சொன்னால் என கேட்டார்.

தன் கடைசி மூச்சு உள்ளவரை பாரதிதான் தன் கணவன் என்றும் நான் அவர் மனைவி ஆகவே வாழ்ந்து மடிவேன் விவாகரத்து செய்ய மாட்டேன், நீங்க வெளிய போங்க என்று சொல்லிவிட்டார். எனவே பாரதி கண்ணம்மா விவாகரத்து செய்து கொள்ளும் முடிவில் இருப்பதை அறிந்த சௌந்தர்யா வீட்டுக்கு சென்ற ருத்ர தாண்டவம் ஆட தயாராகிவிட்டார்.

அதேவேளையில் ஹேமாவிற்கு உணவு கொடுக்க பாரதி பள்ளிக்கு வர அங்கு ஹேமா சமையல் அம்மா எப்போ வருவாங்க என பாரதி இடம் கேட்டு வெறுப்பேத்த கண்ணம்மா ஹேமாவிற்கு பாரதிக்கும் ஸ்பெஷலாக சிக்கன் சமைத்துக் கொடுக்க ஹேமா மகிழ்வுடன் வாங்கிக்கொண்டார்.

பிறகு பாரதி ஹேமாவிற்கு உணவு ஊட்டுவதை பார்த்த லட்சுமி கண்ணம்மாவிடம் தன் தந்தையை பற்றி கேட்டு வருத்தப்பட, கண்ணம்மா இன்று இரவு உனது தந்தையை பற்றி கூறுகிறேன் என சொல்லி சமாளித்து விடுவதுபோல் இன்றைய எபிசோட் அருமையாக இருந்தது.

- Advertisement -

Trending News