சொக்கன் சூரி இப்ப ஹாப்பி அண்ணாச்சி.. இயக்குனர் ராம், உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

சூரி இப்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். காமெடியனிலிருந்து கதையின் நாயகனாக மாறி இருக்கும் இவர் நடிப்பில் சமீபத்தில் கருடன் வெளியாகி இருந்தது. அதில் இவருடைய நடிப்பு பாராட்டுகளை பெற்றதோடு நல்ல விமர்சனங்களையும் தேடி தந்தது.

அதை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இவர் நடிக்கும் கொட்டுக்காளி படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி இணைந்து நடித்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற பல அற்புதமான படைப்புகளை இயக்கியிருக்கும் ராம் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் கடந்த ஜனவரி மாதம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

சர்வதேச திரைப்பட விழாவில் ஏழு கடல் ஏழுமலை

அதில் பிக் ஸ்கிரீன் போட்டி பிரிவில் தேர்வாகி பலத்த வரவேற்பையும் பெற்றது. அதை தொடர்ந்து இப்படத்திற்கு மீண்டும் ஒரு சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது ஏழு கடல் ஏழுமலை படம் ரொமேனியா நாட்டின் க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் ட்ரான்சில்வேனியா சர்வதேச விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

நோ லிமிட் என்னும் பிரிவில் திரையிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தற்போது வெகுவான பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த பட குழுவினரும் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இந்த சந்தோஷ செய்தியை நிவின்பாலி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உண்மையில் இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாகும். அந்த வகையில் அழகான காதலை பற்றி பேசும் இப்படம் ரிலீசுக்கு முன்பே பெரும் அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.

Next Story

- Advertisement -