சூரிக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல காமெடி நடிகர்.. வெற்றி மாறனிடம் வேணாம் என மறுத்த பிரபலம்

சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டியில் வெற்றிமாறன் கதையின் நாயகன் தான் சூரி கதாநாயகன் விஜய் சேதுபதி என தெரிவித்திருந்தார்.

விடுதலை படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அனைவருக்குமே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு அடர்ந்த காட்டில் நடக்கும் விஷயத்தை மர்மங்களையும் வைத்து தான் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார்.

Also read: விடுதலை பார்த்துவிட்டு சூரியை விமர்சித்த விஜய்சேதுபதி.. அந்த மாதிரி ட்ராக் இனி வேண்டாம்

விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் காரணம் படத்தின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். விடுதலை படத்தில் சூரி நடித்திருந்தாலும் முதலில் நடிக்க இருந்தது வடிவேலுதான் எனக் கூறி வருகின்றனர்.

வெற்றிமாறன் முதலில் வடிவேல் விடுதலை படத்தின் கதையை கூறியிருந்த போதும் வடிவேலு இப்படத்தில் ஒரு சில காரணங்களை கூறி மறுத்துள்ளார். அதன் பிறகுதான் வேறு வழியின்றி சூரியிடம் விடுதலை படத்தின் கதையை கூறியுள்ளார்.

Also read: சூரியின் இடத்தை பிடித்த பிரபல காமெடியன்.. வேறு வழி இல்லாமல் மாறிய ரூட்!

மேலும் வெற்றிமாறனின் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கியிருக்கிறார். தற்போது அதற்கான படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறி வருகின்றனர்.

Also read: விடுதலைக்காக காத்திருந்த சூரி.. கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றிய விஜய் சேதுபதி

வெற்றிமாறன் விடுதலை படம் வெளியாகாமல் இருப்பதால் அடுத்தடுத்து படங்கள் இயக்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பலரும் கூறி வருகின்றனர் விடுதலை படம் இம்மாத வெளியீட்டுக்கு பிறகு அடுத்ததாக சூர்யா படத்தின் முழு வேலையில் ஈடுபட்டு படத்தை முடித்தார் எனவும் கூறி வருகின்றனர்.

- Advertisement -