ADHD Symptoms: அந்தக் காலம் அது வசந்த காலம் என்று சொல்வதற்கு ஏற்ப, தற்போது நடக்கிற ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்தால் நம் கடந்து வந்த பாதைகள் சொர்க்கமாக தெரிகிறது. தெருவில் ஆடி ஓடி ஆர்ப்பரித்த காலங்கள் எல்லாம் அருமையானது. சாப்பிட மட்டுமே வீட்டிற்கு போயிட்டு வெளியில் வந்து மண்ணில் விளையாண்டு எங்கே இருக்கிறோம் என்று வீட்டில் இருப்பவர்கள் தேடும்படி துள்ளித் திரிந்து வளர்ந்து வந்தோம்.
சில விஷயங்கள் காலம் கடந்த பிறகு தான் நமக்கு புரிய வரும். அப்படித்தான் இப்ப உள்ள குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைந்து ஒரே இடத்தில் இருப்பதை பார்க்கும் பொழுது நம்ம காலம் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரே ஒரு போன் மட்டும் இருந்தால் போதும் அவர்களுடைய உலகமே கையில் இருக்கு என்று நினைக்கிறார்கள்.
குழந்தைகளிடம் நேரம் செலவழிப்பது ரொம்ப முக்கியம்
இதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது. அத்துடன் அவர்களுடைய மனநிலை மாறிக்கொண்டே வருகிறது. இதனால் நம் குழந்தைகளிடம் கவனிக்க வேண்டிய சில அறிவுரைகள் இருக்கிறது. அதாவது ADHD என்ற அதற்கு பெயர்..
ADHD என்றால் என்ன: கவனக்குறைவு மற்றும் அதிக அளவில் ஹைப்பர் ஆவதால் இந்த பிரச்சனை ஏற்படும். இது ஒரு நரம்பு தளர்ச்சி பிரச்சனை. இதற்கான காரணங்கள் முன்கூட்டியே பிரசவம் ஆவது, குழந்தை கம்மியான எடை பிறப்பு போன்ற காரணங்களால் இந்த நோய் வரும். அந்த வகையில் அமெரிக்காவில் 3 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 6 மில்லியன்களுக்கும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எப்படி இருக்கும் என்றால் அதிகமாக பதற்றம் அடைவது. அவர்களுக்கு இருக்கும் வேலையை முடிப்பதில் சிரமம் பட்டு இருப்பார்கள்.குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD குறித்து மூத்த தொழில்சார் சிகிச்சையாளரும், லெக்சிகன் ரெயின்போ தெரபி மற்றும் குழந்தை மேம்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் இஷா சோனி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD ஆரம்பகால அறிகுறிகள்: குழந்தைகள் ஒரு இஞ்சின் மாதிரி செயல்பட்டு வருவார்கள். அத்துடன் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பது அல்லது விளையாடுகிற விஷயங்களில் கூட கவனம் செலுத்துவதில் சிரமப்படுவார்கள். அமைதியற்ற சூழ்நிலையில் இருப்பது போல் மன அழுத்தத்தில் இருப்பார்கள். நிதானமாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். அத்துடன் ஓய்வு எடுக்கவும் நினைக்க மாட்டார்கள். இவை அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD அறிகுறிகள் ஆகும்:
அதே மாதிரி இந்த நோய் இளமைப் பருவத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களையும் தாக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்துவிட்டால் அவர்களுடைய அறிகுறிகள் எப்படி இருக்கும் என்றால் அவருக்கான வேலைகளை சீராக முடிப்பதில் சிரமப்படுவார்கள். அடிக்கடி பொருட்களை தொலைப்பது, கவனக்குறைவாக இருப்பது, தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது, எந்த முடிவு எடுத்தாலும் அவசரத்தில் எடுப்பது, சிந்திக்காமல் செயல்படுவது இது அனைத்தும் இளமைப் பருவத்தில் இருப்பவர்களுக்கு வரும் அறிகுறிகள்.
தற்போது இந்த நோயால் நடிகர் பகத் பாசிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இப்பொழுது 41 வயது ஆகிய நிலையிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் தான் வெளிவந்திருக்கிறது. அதாவது பகத் பாசில் மூளையை ஆட்டி பிடிக்கும் கொடிய நோயாக ADHD நோயால் அவஸ்தைப்பட்டு வருகிறார். இதற்கு ஒரு தீர்வு உண்டா என்று சமீபத்தில் நடந்த விழாவில் டாக்டரிடம் பகத் பாஸில் கேட்டிருக்கிறார்.
அதற்கு டாக்டர் குழந்தை பருவத்திலேயே கண்டறிந்தால் தீர்வு நிச்சயம் உண்டு என்று சொல்லி இருக்கிறார். இதற்கு மருந்து எதுவும் இல்லாததால் பகத் பாஸில் இப்பொழுது வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்.
ஆரோக்கியமாக இருக்க சில வழிமுறைகள்
- உயிரை காப்பாற்றும் 3 மாத்திரைகள், மருத்துவர் சொல்லும் ரகசியம்
- இந்த 7 ஜூஸ் குடிங்க போதும்
- ABC பவுடரை வீட்டில் எளிதாக பண்ணுவது எப்படி