திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சூறாவளி போல் சுழட்டி அடிக்கும் வடிவேலு.. தஞ்சமடையும் சில்வண்டுகள்

வடிவேலுவுக்கு சினிமாவில் போடப்பட்டிருந்த தடைக்காலம் தற்போது முடிவடைந்து விட்டது. இதனால் அவர் மீண்டும் புதுப்பொலிவுடன் படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய பழைய இடத்தை பிடிக்கவும் போராடி வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இன்னும் சில திரைப்படங்களில் நடிப்பதற்கும் அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இப்படியே அவர் இடைவெளி விடாமல் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டால் அவருடைய பழைய இடம் அவருக்கு தானாக வந்து விடும். இதனால் வடிவேலுவுடன் இணைந்து நடித்த சின்ன சின்ன ஆர்ட்டிஸ்ட்டுகள் எல்லாம் தற்போது அவரை தேடி வர ஆரம்பித்து விட்டார்களாம்.

அந்த வகையில் முத்துக்காளை, போண்டாமணி உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர் மூலமாகத்தான் சினிமாவில் சிறு சிறு காமெடி நடிகர்களுக்கும் பட வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்ட காரணத்தால் அந்த நடிகர்களுக்கெல்லாம் வாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. அதனால் வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர்கள் தற்போது வடிவேலு மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி விட்டதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம்.

மீண்டும் அவர் தங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் வடிவேலுவை தற்போது தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் வடிவேலு அவர்களை கண்டு கொள்வாரா அல்லது டீலில் விட்டு விடுவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

Trending News