வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

2023 வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த 5 படங்கள்.. வாரிசு செய்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவை பொருத்தவரையிலும் டாப் ஹீரோக்களின் படங்களானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது. அதிலும் இந்த ஆண்டு மட்டும் வெளியான டாப் ஹீரோக்களின் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மட்டுமல்லாமல் வசூலிலும் சக்கை போடு போட்டுள்ளது. அப்படியாக இந்த ஆண்டு வெளியாகி முதல் ஐந்து நாட்களில் மட்டும் அதிக வசூல் சாதனை படைத்த 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

வாரிசு: இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ஜனவரி 11-ம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு. இதில் விஜய் உடன்  ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களிலேயே உலக அளவில் 160 கோடி வரை வசூல் செய்த மாபெரும் சாதனை படைத்தது.

Also Read: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. வாரிசு படத்தை வைத்து பிளான் போட்ட சன் டிவி

துணிவு: இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் துணிவு. இதில் அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் விஜய்யின் வாரிசு படத்துடன் போட்டி போட்ட நிலையில் முதல் 5 நாட்களில் மட்டும் உலக அளவில் 120 கோடி வரை வசூல் செய்தது.

வாத்தி: தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியான திரைப்படம் வாத்தி. இதில் தனுஷ் உடன் சம்யுக்தா மேனன், சாய்குமார், இளவரசு, சமுத்திரக்கனி, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் மட்டும் உலக அளவில் 60 கோடி வரை வசூல் செய்தது.

Also Read: துணிவு வெற்றியால் அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்.. அப்பாவி நடிகரை டீலில் விட்ட வினோத்

விடுதலை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. மேலும் இப்படத்தில் சூரி உடன் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதமேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் மட்டும் உலக அளவில் 22 கோடி வசூல் செய்தது.

பத்து தல: இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மார்ச் 30ஆம் தேதி வெளியான திரைப்படம் பத்து தல. இதில் சிம்பு உடன்  கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பிரியா பவானி சங்கர், கலையரசன், டிஜி அருணாச்சலம், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களிலேயே உலக அளவில் 19 கோடி வசூல் செய்தது.

Also Read: விடுதலை டீமுக்கு அடித்த லக்.. மகிழ்விக்க தயாரிப்பாளர் வாரி வழங்கிய பரிசு!

- Advertisement -

Trending News