பெண்ணால் நடந்த கைது, பெண்ணாலேயே தலை நிமிர்ந்த எஸ் ஜே சூர்யா.. யாருக்கும் தெரியாத அந்த 5 வருடம்

SJ Suryah: இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு வந்து தற்போது நல்ல நடிகராக வளர்ந்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை நவீன சினிமாவின் நடிக வேள் என்று பாராட்டி இருக்கிறார். ஆனால் இப்படி ஒரு உயரத்தை அடைய அவர் பட்ட கஷ்டங்கள் அதிகம்.

வாலி மற்றும் குஷி என்று அறிமுகமான புதிதிலேயே விஜய் மற்றும் அஜித்தை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். அதன் பின்னர் குஷி படத்தை இந்தி, தெலுங்கு வெர்ஷனில் எடுத்து அங்கேயும் வெற்றி கண்டார். அதன் பின்னர் நியூ படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார்.

யாருக்கும் தெரியாத அந்த 5 வருடம்

ஆனால் எஸ் ஜே சூர்யாவிற்கு இந்த பயணம் ரொம்பவும் கடினமானதாகவே இருந்தது. நியூ படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் சென்சார் போரில் இப்போதைய அரசியல் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு சில காட்சிகளை நீக்க சொல்லி எஸ் ஜே சூர்யாவிடம் சொன்னபோது சென்சார் குழுவினரோடு அவருக்கு பெரிய பிரச்சினையை ஏற்பட்டு இருக்கிறது. கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வானதி ஸ்ரீனிவாசன் மீது தன்னுடைய செல்போனை தூக்கி எறிந்து இருக்கிறார்.

சென்சார் போர்டு குழுவினர் எஸ் ஜே சூர்யா மீது புகார் கொடுக்க போலிஸ் அவரை கைது செய்திருக்கிறது. சினிமாவுக்கு பொறுமை ரொம்ப முக்கியம் என்பது அப்போது அவருக்கு புரியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது. நியூ படத்திற்கு பிறகு தொடர்ந்து அவர் எடுத்த படங்கள் அத்தனையுமே தோல்வி.

வித்தியாசமான கதையிலிருந்து எடுக்கிறேன், அடல்ட் கன்டென்ட் எடுக்கிறேன் என மொத்தமாக சொதப்பிவிட்டார். ஒரு கட்டத்தில் சினிமாவை வெறுத்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வெளி உலகத்திற்கே வராமல் இருந்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

யோகா, தியானம் என தன்னை பொறுமை படுத்த எவ்வளவோ முயற்சிகளை எடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் விஜய் எஸ் ஜே சூர்யாவிற்கு அழைப்பு விடுத்து எனக்கு நீங்கள் கதை கூட சொல்ல வேண்டாம் ஒரு படம் பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் அதைக் கூட எடுத்துக் கொள்ளும் நிலைமையில் சூர்யாவின் மனநிலை இல்லை. ஐந்து வருடங்கள் கழித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் எஸ் ஜே சூர்யாவுக்கு கிடைத்தது. மனிதி வெளியே வா என்னும் மைய கருத்தை கொண்டு வெளியான இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா ஏற்று நடித்த அருள் தாஸ் கேரக்டர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் பேசும் ஆண் என்னும் நெடில் வசனம் இன்று வரை பிரபலமாக இருக்கிறது. ஒரு பெண் மீது நடத்திய தாக்குதலால் கைது நிலைமைக்குப் போன எஸ் ஜே சூர்யா வின் வாழ்க்கை இறைவி என்னும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தால் மீண்டும் அவர் கைகளில் கிடைத்தது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் சைக்கோ வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பின்னர் மெர்சல், மார்க் ஆண்டனி என அவர் தொட்ட இடமெல்லாம் துலங்க ஆரம்பித்தது. வித்தியாசமான வில்லன் கேரக்டர் என்றாலே இனி எஸ் ஜே சூர்யா தான் என்று தென்னிந்திய சினிமாவை முடிவு செய்துவிட்டது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்துவிட்டு ரஜினியை எஸ் ஜே சூர்யாவை பார்த்து மிரண்டு விட்டார். இந்த அளவு புகழை அடைவதற்கு முன் எஸ் ஜே சூர்யா அடைந்த அவமானங்கள் அதிகம்.

எஸ் ஜே சூர்யா நடிப்பில் ரிலீசாக இருக்கும் படங்கள்

  • லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்
  • சரி போத சனி வரம் (தெலுங்கு)
  • ராயன்
  • இந்தியன் 2
  • வீர தீர சூரன்

Next Story

- Advertisement -