ஒருவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்த 6 கதாபாத்திரங்கள்.. சிம்புக்கு பதிலாக நடித்த ஜீவா

பொதுவாகவே ஒரு படங்களின் வெற்றிக்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அந்த படத்தில் நடிக்கும் கேரக்டர்களும் ரொம்ப முக்கியம். ஏனென்றால் அந்த கதைக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய கதாபாத்திரம் இருந்தால் மட்டும்தான் மக்கள் பார்த்து ரசித்து கொண்டாடி வருவார்கள். இப்படி நாம் பார்த்து ரசித்த சில கதாபாத்திரங்கள் முதலில் அவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்து அல்லது அவர்களுக்கு பதிலாக டூப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

தி லெஜண்ட்: ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் கடந்த வருடம் தி லெஜண்ட் திரைப்படம் வெளிவந்தது. இதில் சரவணன் அருள், ஊர்வசி ரவுடேலா, விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கிட்டத்தட்ட ரஜினி நடித்து வெளிவந்த எந்திரன் படத்தின் கதையே போலவே இக்கதை அமைந்திருக்கும். இதில் விவேக், ஹீரோவுக்கு மாமாவாக நடித்திருப்பார். ஆனால் இந்த படம் உருவாக்கிக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராத விதமாக விவேக் இறந்து போனதால் அவர் போஷனுக்கு டூப் போட்டு சில காட்சிகளை எடுக்கும் படியாக அமைந்தது. ஆனாலும் அதை சரியாக காட்ட முடியாமல் படத்தை எடுத்து முடித்து விட்டனர்.

Also read: அஜித்துக்கு சிபாரிசு செய்த விவேக்.. லைஃப் டைம் படமாக ஏகே  கொடுத்த பிளாக்பஸ்டர் 

துணிவு: எச்.வினோத் இயக்கத்தில் இந்த வருடம் பொங்கல் வாரத்தில் ரிலீஸ் ஆகி துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதில் அஜித், மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் மாஸ்க் போட்டு பணத்தை ரோட்டில் சிதற வைக்கும் காட்சியில் அவர் நடிக்க வில்லையாம். அதற்கு பதிலாக டூப் போட்டு வேறொரு நடிகர் நடித்திருக்கிறார். ஏனென்றால் இதற்கான சூட்டிங் அண்ணா சாலையில் எடுக்கப்பட்டதால் அஜித் வந்தால் கூட்டம் அதிகமாகும் என்பதால் இந்த ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள்.

நினைத்தேன் வந்தாய்: கே.செல்வ பாரதி இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு நினைத்தேன் வந்தாய் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ரம்பா, தேவயானி, மணிவண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரம்பா அறிமுகமாகி வந்த வண்ண நிலவே பாட்டில் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து தான் அந்தப் பாட்டை எடுத்திருக்கிறார்கள். அந்தப் பாட்டில் ரம்பா முகத்தை காட்டி இருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அந்த லாங் ஷாட்டுக்கு ரம்பா பயந்ததால் அவருக்கு பதிலாக டூப் போட்டு எடுத்திருக்கிறார்கள்.

Also read: குணச்சித்திர கேரக்டரில் நடித்து வெற்றி கண்ட விவேக்கின் 6 படங்கள்.. தனுஷை வெளுத்து வாங்கிய ஏகாம்பரம்

உன்னை நினைத்து: விக்ரமன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு உன்னை நினைத்து திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, சினேகா, லைலா மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆனால் இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக விஜய் தான் பாதி காட்சிகளில் நடித்தார். ஆனால் அதன் பின் இயக்குனருக்கும் விஜய்க்கும் ஒரு சில வேறுபாடுகள் படத்தின் மீது இருந்ததால் இந்த கதையிலிருந்து விஜய் விலகி விட்டார். அதன் பிறகு தான் இயக்குனர் சூர்யாவை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார்.

கோ: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு கோ திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜீவா, அஜ்மல், பியா பாஜ்பி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் முதலில் கார்த்தி நடிப்பதாக கூறப்பட்டது. அதன் பின் சிலம்பரசன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிலம்பரசன் அந்த நேரத்தில் கால் சீட் பிரச்சனை இருந்ததால் அவரால் தொடர்ந்து படப்பிடிப்புக்கு வர முடியாததால் இயக்குனர் அவருக்கு பதிலாக ஜீவாவை நடிக்க வைத்தார்.

தேவர் மகன்: இயக்குனர் பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி,கமலஹாசன், ரேவதி, கௌதமி, நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரேவதிக்கு பதிலாக முதலில் மீனா தான் நடித்தார். அவரை வைத்து 25% படபிடிப்பை முடித்த பிறகு சில காட்சிகளில் மீனா சரியாக பொருந்தவில்லை என்பதால் அவருக்கு பதிலாக ரேவதி நடித்தார்.

Also read: சிம்பு ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்.. ரெண்டு பட வெற்றியால் தனுஷை ஓவர்டெக் செய்த எஸ் டி ஆர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்