வாரிசு பட நடிகருடன் திருமணமாகி செட்டில் ஆன சிவரஞ்சனி.. 90களில் இளசுகள் ஏங்கிய கண்ணழகி

90 களில் நம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியான பல நடிகைகள் நம் மனதில் குடிக்கொண்டுள்ளனர். அன்றைய கால படங்கள், ஹீரோக்களை மையமாக வைத்து எடுப்பதைவிட கதாநாயகிகளுக்கு கதைக்களத்தில் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆகையால் படம் முழுவதும் பல காட்சிகளில் இடம்பெறும் கதாநாயகிகள் ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக 50 வயதை கடந்த போதிலும் மனதில் நின்று வருகின்றனர்.

அதில் முக்கியமாக நடிகைகள் மீனா, ரம்பா, மாதவி, ராதா, அம்பிகா என் பல லிஸ்ட் உள்ளது. இதில் 90 களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு வந்த நடிகை தான், நடிகை சிவரஞ்சனி. உமா மகேஸ்வரி என்ற இயற்பெயர் கொண்ட இவர், கன்னடத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழில் சின்ன மாப்பிள்ளை , பொன் விலங்கு, தாலாட்டு, கலைஞன்,தலைவாசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

Also Read: 17 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகும் சிவரஞ்சனியுன் மகள்.. அப்படியே அம்மாவை உரிச்சு வச்சுருக்காங்க..!!

மற்ற நடிகைகளுக்கு இல்லாத ஒன்றாக பூனை கண்களில் வசீகர பார்வையுடன் வலம் வரும் இவர், பாடல் காட்சிகளில் சற்று கிளாமராகவே இருப்பார். ஆரம்பக்கால 90களிலிருந்து 1999 வரை கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த சிவரஞ்சனி, விஜயின் வாரிசு படத்தில் நடித்துள்ள பிரபலத்துடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜயின் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளவர் தான் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த். இவர் வாரிசு பட ஆடியோ லாஞ்சில் மேடையில் ஏறி நின்று விஜயை புகழ்ந்து, அவருக்கு நன்றியும் கூறினார். மேலும் இப்படம் முழுக்க,முழுக்க தெலுங்கு படம், தமிழ் படமே இல்லை என்ற சர்ச்சையையும் கிளப்பியுள்ளார். இதனிடையே இவர் 1994 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆமே என்ற சூப்பர்ஹிட் படத்தில் சிவரஞ்சினியுடன் இணைந்து நடித்தார்.

Also Read:  மேடையில உளரும் போதே தெரிஞ்சது, வாரிசு முழுக்க முழுக்க அந்த மாதரி படம்.. குண்டத்தூக்கி போட்ட விஜய்யின் ப்ரோ!

அப்படம் பட்டித் தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய நிலையில், சிவரஞ்சனி அவருடனே தொடர்ந்து அடுத்தடுத்த 3 படங்களில் நடிக்க கமிட்டானாராம். இவர்கள் இருவரின் ஜோடி அங்கு பேசப்பட்டதையடுத்து இருவரும் காதலிக்கிறார்கள் என்ற புரளிகள் கிளம்பியது. ஆனால் சிவரஞ்சனியும், ஸ்ரீகாந்தும் மறைமுகமாக இருவரும் காதலித்து வந்ததையடுத்து ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு சிவரஞ்சனியை அழைத்து சென்றாராம். அங்கு சென்று பெற்றோர்கள் முன்பாக பூஜை அறையில் சிவரஞ்சனியின் கையில் மோதிரம் போட்டு தங்கள் காதலை இருவரும் வெளிப்படுத்தினார்களாம்.

பின்னர் 1997 ஆம் ஆண்டில் பெற்றோர்களில் சம்மதத்துடன் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். தற்போது இத்தம்பதிக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சிவரஞ்சனி திருமணத்திற்கு பின்பு படங்களில் நடிக்காமல் குடும்பம் தான் முக்கியம் என வலம் வந்ததாகவும், தற்போது குழந்தைகள் வளர்ந்தவுடன் தன்னை படங்களில் நடிக்குமாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார் சிவரஞ்சனி.

Also Read: துணிவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் வாரிசு.. நாளை ட்ரெய்லரில் இருக்கும் உள்குத்து

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்