Connect with us
Cinemapettai

Cinemapettai

sivaranjani-latest-photo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

17 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகும் சிவரஞ்சனியுன் மகள்.. அப்படியே அம்மாவை உரிச்சு வச்சுருக்காங்க..!!

1990ல் ஹ்ருதய சாம்ராஜ்யம் என்ற கன்னட படத்தின்மூலம் சினிமாவில் நுழைந்து அதன்பின் அதே ஆண்டில் மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சிவரஞ்சனி. 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.

தமிழில் இவர் தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, கலைஞன், செந்தமிழ் செல்வன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அன்றைய காலகட்டத்தில் தமிழில் முன்னணி நாயகர்களாக வலம்வந்த விஜயகாந்த், கமல், பிரபு உள்ளிட்ட அணைத்து ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்தார்.

பின்னர் ஆமே என்ற படத்தின்மூலம் 1994 ஆம் ஆண்டு தெலுங்குப்பட உலகில் காலடி எடுத்துவைத்தார். அங்கும் பல படங்களில் நடித்த இவர் தன்னுடன் ஜோடியாக நடித்த மெகா ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து 1997ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின் இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கடைசியாக இவர் 1997ல் தமிழில் துர்க்கை அம்மன் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிவரஞ்சனி தெலுங்குப் படங்களில் நடிக்க சென்றபின் தனது பெயரை ஊஹா என மாற்றிக்கொண்டார்.

இவருக்கு இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சிவரஞ்சனியின் மக்கள் மேதா கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இதற்காக நல்ல கதையை தேடி வருகிறார்களாம் சிவரஞ்சனியும் ஸ்ரீகாந்தும்.

sivaranjani-medha

sivaranjani-medha

மேதா ஏற்கனவே ருத்ரமாதேவி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top