போறாத காலத்தில் சிவகுமாரின் குடும்பம்.. இதுவரை சிக்கி தவித்த 5 பிரச்சனைகள்

Sivakumar family issue: நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் அதிக மரியாதைக்குரியவராக பார்க்கப்படுகிறார். சொற்பொழிவு மூலம் நிறைய நல்ல ஒழுக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து கொண்டு இருக்கும் பணியில் இப்போது இருக்கிறார். காய்ச்ச மரம் கல்லடி படும் என்ற பழமொழிக்கு ஏற்ப சிவகுமார் இதுவரை சந்தித்த ஐந்து பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.

செல்ஃபி முதல் பருத்திவீரன் வரை

செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்: நடிகர் சிவகுமார் மதுரையில் நடைபெற்ற விழா ஒன்றில் தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட ரசிகரின் செல்போனை கீழே தட்டி விட்டு விட்டார். அந்த மொபைல் போன் உடைந்தது மிகப்பெரிய சர்ச்சையான உடன் அந்த இளைஞருக்கு புதிய போன் வாங்கி தரப்பட்டது. அதேபோன்று சென்னையில் ஒரு திருமண விழாவில் ரசிகர் ஒருவர் போட்டோ எடுக்க முயல அந்த ஃபோனையும் சிவக்குமார் கீழே தட்டி விட்டது மிகப்பெரிய சர்ச்சையாகியது .

நாச்சியார் பட சர்ச்சை: ஜோதிகா நடித்த நாச்சியார் என்னும் படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்திருந்தார். அந்த படத்தின் டிரைலரில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி இருப்பார் அது மிகப்பெரிய சர்ச்சையானது. சிவகுமார் குடும்பத்தில் இருந்து வந்த பெண் இப்படி எல்லாம் பேசுவதா என சிவகுமாரையும் சேர்த்து சாடினார்கள் விமர்சகர்கள்.

Also Read:சூர்யா, கார்த்தியை குட்டிச்சுவராக ஆக்கியதே இவர்தான்.. ஆதங்கத்தில் கண்டபடி திட்டிய சிவக்குமார்

ராட்சசி பட சர்ச்சை: ஜோதிகா நடித்த ராட்சசி படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. விருது வழங்கும் மேடை ஒன்றில் ஜோதிகா இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடைபெற்றது. அங்கு கோயில்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. அதை நேரத்தில் மருத்துவமனைகள் தரமானதாக இல்லை. கோயில்கள் கட்ட செலவு செய்யும் பணத்தை வைத்து மருத்துவமனைகளை புதுப்பிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இது பயங்கர சர்ச்சையானது.

கார்த்தி சாதி பற்றி பேசியது: சமீபத்தில் நடிகர் கார்த்தி இயக்குனர் பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றியதை பற்றி பேசியிருந்தார். அப்போது நான் சென்னையில் வளர்ந்ததால் சாதி கட்டுப்பாடுகள் என்பது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையானது. சாதிக் கட்டுப்பாடு இல்லாத நீங்கள் எதற்காக எங்கேயோ கோயம்புத்தூரில் உள்ள குக் கிராமத்தில் வசிக்கும் உங்கள் இனப் பெண்ணை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்தீர்கள் என கேள்வியால் அவரை விளாசினார்கள்.

பருத்திவீரன் சர்ச்சை: பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள். அது போல் ஞானவேல் ராஜா எக்கு தப்பாக ஒரு பேட்டி கொடுக்க மொத்தமாய் அடி வாங்கியது என்னவோ சிவக்குமார் குடும்பம் தான். சினிமாவில் மூத்த கலைஞராக இருக்கும் இவருடைய மகன்களால் ஒரு படைப்பாளி வேதனை பட்டிருப்பது சிவக்குமார் மீது பழியாக விழுந்து இருக்கிறது.

Also Read:சிவகுமாரையே ஏமாற்றும் கார்த்தி, சூர்யா.. தேரை இழுத்து தெருவுல விட்ட ஞானவே