சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததால் கேரியர் க்ளோஸ்.. புலம்பி தவிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை

ஒரு காலத்தில் டாப் நடிகைகள் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டனர். ஆனால் இப்போது அவரது படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என தவித்து வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ஒருவர் அதன் பின்பு வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆகையால் இப்போதும் தொடர்ந்து அவருக்கு நெகடிவ் கதாபாத்திரமே வந்து கொண்டிருக்கிறதாம். அந்த நடிகை தமிழில் முதல் படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்திருந்தார். மேலும் அந்த படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

Also Read : அந்த நடிகை வேண்டவே வேண்டாம்.. துல்கர் சல்மான் நடிகை தான் வேணும் என அடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன்

அதன் பின்பு படுஜோரான கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார். கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தவர். இந்த படத்தில் பாப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் பின்பு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி வெப் தொடரிலும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் எல்லை மீறிய கவர்ச்சியாக காட்சியளித்தார்.

Also Read : தோல்வி அடைந்தாலும் மார்க்கெட் மட்டும் குறையல.. இப்பவே 100 கோடிகளை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்

இப்போது ரெஜினாவுக்கு பட வாய்ப்பு இல்லாததால் புலம்பித் தவித்து வருகிறாராம். தெலுங்கில் எவரு மற்றும் தமிழில் சக்ரா படங்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதனால் ஹீரோயின் வாய்ப்பு ரெஜினாவுக்கு வரவில்லையாம். தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் வாய்ப்பு வருகிறதாம்.

இதனால் வருகின்ற பட வாய்ப்பு எல்லாம் வேண்டாம் என்று உதாசீனப்படுத்தி வருகிறாராம். மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் ஹீரோயின் சப்ஜெக்ட் இருந்தால் மட்டும் வாருங்கள் என கூறி அனுப்புகிறாராம். பல நடிகைகள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கேரியரை தொலைத்த நிலையில் அந்த லிஸ்டில் ரெஜினாவும் சேர்ந்துள்ளார்.

Also Read : ஜோடி சேர்ந்த ஹீரோயினை கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்.. துல்கரின் காதலிக்கு வீசியவலை

- Advertisement -

Trending News