கற்பனைக்கு எட்டாத இயற்கையின் பரிசு.. ஏலியன் துணையோடு வரும் சிவகார்த்திகேயன், வைரலாகும் அயலான் ட்ரெய்லர்

Ayalaan Trailer: சிவகார்த்திகேயனின் அயலான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களம் இறங்கும் இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்காக குழந்தைகள் தான் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also read: அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. அதிக லாபத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

அந்த அளவுக்கு படத்தின் போஸ்டர், டீசர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அயலான் படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இன்று காலை முதலே சோசியல் மீடியாவே கதி என இருந்தனர். இப்படி பெரும் ஆர்வத்தை தூண்டி இருந்த அந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

Also read: கேப்டன் மில்லரை முந்திய அயலான்.. TN தியேட்டர் உரிமம் மட்டும் இத்தனை கோடியா.!

பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளும், மிரட்டல் பின்னணி இசையும் ட்ரெய்லரை திரும்பத் திரும்ப பார்க்க தூண்டி இருக்கிறது. திடீரென பூமிக்குள் வரும் ஏலியனை பார்த்து மிரளும் சிவகார்த்திகேயன் அதன் துணையோடு பூமியை காப்பாற்றுகிறார். அதை காமெடி கலந்து சொல்லி இருக்கும் அயலான் ட்ரெய்லர் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -spot_img

Trending News