சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஏலியன் துணையோடு எதிரியை வேட்டையாடும் சிவகார்த்திகேயன்.. மிரட்டும் அயலான் டீசர்

Ayalaan Teaser: வருட கணக்கில் இழுத்தடித்து வந்த சிவகார்த்திகேயனின் அயலான் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் ஏலியன் துணைகொண்டு சயின்ஸ் ஃபிக்சன் பாணியில் இப்படம் உருவாகி இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாவீரன் மூலம் தரமான வெற்றியை ருசித்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக அயலான் மூலம் சம்பவம் செய்ய இருக்கிறார். அந்த வகையில் இப்படத்தின் கிராபிக்ஸ் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காகவே தயாரிப்பு தரப்பு 40 கோடியை தாண்டி செலவு செய்திருந்தது.

Also read: 800 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயனின் 5 படங்கள்.. பொங்கல் பண்டிகையை குறி வைத்த அயலான்

கிட்டத்தட்ட 10 மாத காலம் இதற்கான வேலையும் நடைபெற்றது. இப்படி பல விஷயங்களில் மெனக்கெட்டுள்ள படக்குழு இன்று டீசர் வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் காலையிலிருந்தே சோசியல் மீடியாவே கதியாக கிடந்தனர்.

இப்படி பலரின் ஆர்வத்தை தூண்டி இருந்த அயலான் டீசர் தற்போது மாஸாக வெளியாகி இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு எனர்ஜி இந்த உலகத்தை ஆக்கிரமிக்கிறது என்ற வசனத்துடன் வீடியோ தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, ஏலியனின் வருகை என ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக இருக்கிறது.

Also read: தீபாவளி ரேஸில் இருந்து விலகிய அயலான்.. ஏலியனோடு சம்பவத்திற்கு தயாரான வைரல் போஸ்டர்

அதிலும் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் பிரம்மாண்டத்தின் உச்சத்தை காட்டியுள்ளது. இப்படியாக வரும் டீசரில் ஏலியன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோரின் காமெடி காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. அந்த வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகும் அயலானை இப்போதே ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

- Advertisement -

Trending News