Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாரி வள்ளலாக மாற ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. வாரிசு நடிகையை வைத்து அப்பாவுக்கு விட்ட தூது பலிக்குமா!

வாரிசு நடிகையின் மூலம் தூதுவிட்டுள்ள சிவகார்த்திகேயன் மிகப்பெரும் பிளான் ஒன்றை போட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் இப்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக மாறி இருக்கிறார். பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படமும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதையடுத்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அதில் அவரின் ஆக்சன் பசிக்கு தீனி போடும் வகையில் மிலிட்டரி மேன் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான வேலைகளில் தான் தற்போது பட குழு தீவிரமாகி இருக்கிறது. இந்நிலையில் அவர் அதிதி சங்கரை வைத்து பிரம்மாண்ட இயக்குனருக்கு தூது ஒன்று விட்டுள்ளாராம். அதாவது மாவீரன் படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி தான் நடித்துள்ளார்.

Also read: புலியை பார்த்து சூடு போட்ட பூனை.. விஜய் இடத்தை பிடிக்க படாத பாடுபடும் சிவகார்த்திகேயன்

அந்த நட்பின் அடிப்படையிலேயே சிவகார்த்திகேயன் தன்னுடைய 25ஆவது படத்தை சங்கர் இயக்க வேண்டும் என்று மகள் மூலம் தூது அனுப்பி இருக்கிறார். ஆனால் அதற்கு சங்கர் தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருந்தாலும் எப்படியாவது அவருடைய இயக்கத்தில் நடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ள சிவா தற்போது மீண்டும் அதிதியை சிபாரிசுக்கு அழைத்து இருக்கிறார்.

ஆனால் இந்த முறை வேறு ஒரு பிளானை அவர் போட்டிருக்கிறார். ஏனென்றால் எப்படியும் சங்கர் தன்னை தனியாக வைத்து படம் எடுக்க ஒத்துக் கொள்ள மாட்டார் என்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனாலேயே அவர் இயக்கப் போகும் வேள்பாரி படத்தில் தனக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அதிதி மூலமாக அவர் கேட்டுள்ளார்.

Also read: சிவகார்த்திகேயன் கூட்டணியை உறுதி செய்த கமல்.. இணையத்தில் காட்டுத் தீயாக பரவும் SK21 அறிவிப்பு

பொன்னியின் செல்வனுக்கு பிறகு இந்த வேள்பாரி பற்றிய செய்தி தான் பலருக்கும் ஆர்வத்தை உருவாக்கியிருக்கிறது. மேலும் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க தான் சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

ஆனால் இதற்கு சங்கரிடமிருந்து இன்னும் பாசிட்டிவான எந்த பதிலும் கிடைக்கவில்லை. மேலும் சிவகார்த்திகேயனுக்கு முதன்மை கதாபாத்திரம் கிடைக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. இருப்பினும் ஏதாவது ஒரு முக்கிய கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த வகையில் வேள்பாரி கதையை சங்கர் முழுமையாக தயார் செய்தவுடன் அது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: சிங்கம் போல் கர்ஜிக்க தயாரான சூப்பர் ஸ்டார்.. தோல்வி பயத்தால் சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு

Continue Reading
To Top