சூப்பர் ஸ்டாராக மாறத் துடிக்கும் சிவகார்த்திகேயன்.. இணையத்தில் லீக்கான மாவீரன் பட கதை

சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாகி கொண்டிருக்கிறார். அந்த வகையில் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டிலை பட குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மாவீரன் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்கிறது.

படத்தின் தலைப்பையே ஒரு டீசர் போன்று வெளியிட்டிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. மேலும் பல ரவுடிகள் ஒருவரை அடித்து வீழ்த்தும்போது திடீரென தோன்றும் கயிறுகள் அந்த மனிதனை தாங்கிப் பிடித்து எதிரிகளை துவம்சம் செய்ய வைக்கிறது. அதன் பிறகு சிவகார்த்திகேயனின் முகத்தை காண்பித்து மாவீரன் என்ற டைட்டிலை அறிவிக்கின்றனர்.

பொம்மலாட்டம் பாணியில் வெளிவந்திருக்கும் இந்த டைட்டில் வீடியோவை பார்க்கும்போது இதுதான் கதையாக இருக்கும் என்று ஒரு யூகம் அனைவருக்கும் எழுகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் கதை பற்றிய ஒரு தகவல் இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

80 காலகட்டத்தில் நடக்கும் இந்த கதையில் சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண ஏழை குடும்பத்து மனிதராக இருக்கிறார். அநியாயத்தை தட்டிக் கேட்கும் வீரனாக இருக்கும் இவர் அந்த ஏரியா மக்களுக்கே ஹீரோவாக இருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சில பணக்காரர்களால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க சிவகார்த்திகேயன் முன் வருகிறார்.

அதாவது அநியாயத்தை தட்டிக் கேட்கும் மாவீரனாக சிவகார்த்திகேயன் களம் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி கண்டாரா இல்லையா என்பதுதான் மாவீரன் படத்தின் முழு கதை. இப்படி ஒரு தகவல் தான் இணையதளத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் கெட்டப்பும் அப்படியே 80 காலகட்டத்தை பிரதிபலிக்கிறது. அதிலும் தளபதி படத்தில் வரும் சூப்பர் ஸ்டாரை போன்று இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் தலைப்பு கூட சூப்பர் ஸ்டாரின் பட தலைப்பு தான். 1986 வெளிவந்த சூப்பர் ஸ்டாரின் மாவீரன் திரைப்படத்தில் அவர் அநியாயத்திற்கு எதிராக தட்டிக் கேட்கும் ஒரு நபராக தான் இருப்பார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் பட தலைப்பை மட்டுமல்லாமல் கதை கருவை கூட காப்பியடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீப காலமாக அவர் தன்னுடைய படங்களில் எல்லாம் ரஜினி குறித்த ஏதாவது ஒரு ரெஃபரன்ஸை வைத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்திலும் சிவாஜி திரைப்படத்தின் சில காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவே சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டாரின் இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார் என்று பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. தற்போது மாவீரன் திரைப்படத்தில் இருக்கும் இத்தனை விஷயங்களும் அதை உறுதி செய்து விட்டது. தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக டாப் 5 ஹீரோக்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அந்த முதல் இடத்தையும் கைப்பற்ற பிளான் போட்டு வருகிறார்.

பல வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் ரஜினியை இதுவரை எந்த நடிகர்களாலும் முந்த முடியவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் அதை நடத்தி காட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். அவருடைய இந்த முயற்சி பலிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்