அவதார் டீமுடன் கூட்டணி போடும் சிவகார்த்திகேயன்.. இது என்னடா புது ஊருட்டா இருக்கு!

சிவகார்த்திகேயன் மாஸ் வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் பிரின்ஸ் படம் மிகப்பெரிய சருக்களை ஏற்படுத்தியது. இப்படத்தின் தோல்விக்கு காரணம் படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் பரவிய நெகட்டிவ் விமர்சனம் தான் என்று சிவகார்த்திகேயன் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மாவீரன் படம் உருவாகி வருகிறது. மேலும் கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக சிவகார்த்திகேயனின் அயலான் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. டாக்டர் படத்திற்கு முன்னதாகவே அயலான் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் அதன் பிறகு மூன்று படங்கள் வெளியாகிவிட்டது.

Also Read : வாய்ப்புக் கேட்ட பிரபல நடிகை, திமிராக பேசிய சிவகார்த்திகேயன்.. பழசை மறந்து மேடையில் ஆணவ பேச்சு

ஆனால் அயலான் படம் தற்போது வரை வெளியாகாததற்கு சில காரணம் உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் அதிகமானதால் நிதி நெருக்கடியால் சில காலம் தள்ளிப்போனது. அதன்பின்பு கிராபிக்ஸ் பிரச்சனை ஏற்பட்டது. ஏனென்றால் இந்த படம் சயின்ஸ் பிக்சன் சம்பந்தமான படமாக எடுக்கப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்த படம் தாமதமாவதற்கு கிராபிக்ஸ் வேலைகள் மீதமுள்ளது என கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் அவதார் 2 படத்தின் கிராபிக்ஸ் டீம் அயலான் படத்தில் இணைந்துள்ளதாம்.

Also Read : கிரிக்கெட் வீரரை வைத்து சிவகார்த்திகேயன் எடுக்கும் புது அவதாரம்.. தனுஷுக்கு போட்டியாக போட்ட பக்கா பிளான்

இப்போது அவதார் 2 படம் சற்று நெகடிவ் விமர்சனங்கள் பெற்று வந்தாலும் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக அமைத்திருந்தார்கள் என்ற பாராட்டையும் பெற்று வருகிறது. ஆகையால் தான் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு இவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

ஏற்கனவே படத்தின் பட்ஜெட் அதிகமாகவதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் உலக அளவில் வெளியான அவதார் 2 படத்தில் கிராபிக்ஸ் டீம்க்கு எப்படியும் அதிக அளவு சம்பளம் கொடுக்க வேண்டும். இந்த சூழலில் அயலான் படத்தில் இவர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் நம்புற மாதிரியா இருக்கு, ப்ரோமோஷன்காக ஏதோ உருட்டுற மாதிரி இருக்கு என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : 3 நாளில் பட்ஜெட்டில் பாதியை தட்டித் தூக்கிய அவதார் 2.. வசூல் வேட்டையில் மிரள விட்ட ப்ளூ மேஜிக்

Next Story

- Advertisement -