வளர்த்த கிடா மார்பில் முட்டுவதா.! சம்பாதிக்க புதிய ரூட்டை போடும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சினிமாவில் பாண்டிராஜ் இயக்குனர் மூலம் மெரினா திரைப்படத்தின் அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் தனது திறமையை யாரும் எதிர்பார்க்காத அளவில் வளர்த்துவிட்ட அவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை எளிதாக பெற்றார்.

தனுஷ் மூலம் கதாநாயகன் வாய்ப்பை பெற்ற சிவகார்த்திகேயன். ஒவ்வொரு படத்திற்கும் தனது திறமையை மெருகேற்றி வந்த சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்திற்கும் பல வித்தியாசங்களை கொடுத்து வந்தார். இதனால் அவரது படத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள சிவகார்த்திகேயன் இதில் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து படத்தை வெற்றியடையச் செய்து அதன்மூலம் லாபம் பார்த்து வருகிறார். இவரது தயாரிப்பில் இவரே கதாநாயகனாக நடித்த படத்தை வெற்றி பெறச் செய்த படங்கள் டாக்டர், டான் வசூல் 100 கோடியைத் தாண்டியுள்ளது, அதனால் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இணைந்தார்.

இவர் பணம் சம்பாதிக்க புதிய வழியை பயன்படுத்துகிறார். புதுமுக இயக்குனர்களை வைத்து மட்டும் படம் எடுத்து வெற்றி பெற்று அந்த இயக்குனருக்கு சில லட்சங்களை சம்பளமாக கொடுத்து இவருக்கான முழு சம்பளத்தையும் எடுத்துக் கொள்கிறாராம். புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது பாராட்டுக்குரியது, மறுபடியும் இந்த இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார் காரணம் சம்பள விஷயம்தான்.

இந்த புதுமுக இயக்குனர்கள் வெற்றி கொடுத்த பிறகு 2வது முறை சிவகார்த்திகேயனுடன் இணைவது கடினம். காரணம் இந்த இயக்குனர்கள் அதிக சம்பளம் கேட்பார்கள் என்று அடுத்தடுத்து புதுமுக இயக்குனர்களை தேடி செல்கிறார் சிவகார்த்திகேயன். இவரது வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்த பாண்டிராஜ் இயக்குனருக்கு கூட இப்போது இவர் கால்ஷீட் கொடுக்க தயங்குகிறார்.

இவரது வளர்ச்சி பாராட்டுக்குரியது ஆனால் இவர் செய்யும் சில செயல்கள் பல இயக்குனர்களிடம் கெட்ட பெயரை வாங்கும் அளவிற்கு செய்து வருகிறார். பார்க்கலாம் இவரது வெற்றி எப்படி செல்கிறது என்று இவரது வளர்ச்சிக்கு உதவிய இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்