40 கோடி கடனுக்கு சிவகார்த்திகேயன் அடமானம் வெச்ச படம்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் அப்பாவி ஹீரோ

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் சில படங்கள் ரிலீஸ் சமயத்தில் பெரும் பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறது. இதனால் அவர் சில கடன் நெருக்கடிகளுக்கு ஆளான சம்பவமும் உண்டு.

ஆனால் 40 கோடி கடனுக்காக இவர் வேறு ஒரு படத்தை அடமானம் வைத்து எஸ்கேப் ஆகி இருக்கிறார். இதனால் அந்த படம் இப்போது வெளிவர முடியாமல் இருக்கிறது.

அதாவது பல வருடங்களாக வெளிவர முடியாமல் சிக்கித் தவித்த அயலான் கடந்த பொங்கலுக்கு ஒரு வழியாக வெளியானது. ஆனால் அது ரிலீசான கதையே பெரும் அக்கப்போர்தான்.

ஏகப்பட்ட சமரசங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தான் படம் வெளியானது. அதன்படி சிவகார்த்திகேயனின் மேனேஜர் கே ஜே ராஜேஷ்தான் இதை சுமூகமாக முடித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் அடமானம் வைத்த படம்

எப்படி என்றால் அவருடைய தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ஆலம்பனா. அந்தப் படத்தைக் காட்டி பணத்தை கொடுத்து விடுவதாக அவர் வாக்கு கொடுத்திருக்கிறார்.

வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் அப்படத்தின் மொத்த பட்ஜெட் 10 கோடியாக இருக்கிறது. அதன் வியாபாரம் என்று பார்த்தால் சில கோடிகள் தான் அதிகமாக வரும்.

அதை வைத்து எப்படி 40 கோடியை அடைக்க முடியும். ஆனால் கடன் கொடுத்தவர்கள் அதை செட்டில் செய்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

இதில் பாவம் வைபவ் தான் மாட்டிக் கொண்டு விட்டார். ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் அடமானம் வைத்த படம் இப்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

Next Story

- Advertisement -