கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவை ரணகளப்படுத்தி வந்த சிவகார்த்திகேயன், இமான் விவகாரம் லியோ ரிலீஸ் காரணமாக சற்று ஓய்ந்திருந்தது. ஆனாலும் இந்த விஷயத்தில் என்னதான் நடந்தது என்பதை தற்போது பிரபலங்கள் ஒவ்வொருவரும் புட்டு புட்டு வைத்து வருகின்றனர்.
அதில் இமானின் வீடியோ வெளிவந்து வைரலான நிலையில் அவருடைய முதல் மனைவி மோனிகா முதல் முறையாக மனம் திறந்து பேசி இருந்தார். அதில் அவர் சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்து பல விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். அதிலும் இந்த விவாகரத்து நடக்க கூடாது என அவர் பல முயற்சிகளை செய்ததாக கூறியிருந்தார்.
மேலும் இமான் பெண் பார்த்து முடிவு செய்துவிட்டு தான் விவாகரத்து வாங்கினார் என்றும் ஜீவனாம்சம் கூட தரவில்லை என்றும் கூறியிருந்தார். இது பரபரப்பை கிளப்பிய நிலையில் நடிகை குட்டி பத்மினி இந்த விவகாரத்தில் நியாயம் என்ன என்பதை போட்டு உடைத்துள்ளார். அதாவது இமான் குடும்பம் தனக்கு மிகவும் நெருக்கம் என்றும் தன்னை ஒரு அம்மா போல் தான் அவர் பார்த்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவரின் இரண்டாவது மனைவியை நாங்கள் தான் பார்த்து பேசி முடித்தோம். அவருடன் ஒரு வருட காலம் இமான் பழகிய பின்பு தான் சம்மதம் தெரிவித்தார். அது கூட விவாகரத்திற்கு பிறகு தான். மேலும் ஜீவனாம்சம் தரவில்லை என்று மோனிகா சொல்வது சுத்த பொய். இப்போதும் கூட அவர் மாதா மாதம் பணம் தந்து கொண்டுதான் இருக்கிறார்.
குழந்தைகளின் படிப்பு செலவை கூட அவர் தான் பார்த்து வருகிறார். அந்த வகையில் மோனிகா வேண்டுமென்றே இமான் மீது குற்றச்சாட்டு வைப்பதாக குட்டி பத்மினி கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து இந்த விஷயம் மீண்டும் ஒரு பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தவரின் குட்டு வெளிப்பட்டுள்ளது.
ஏற்கனவே பூதாகரமாக வெடித்து வந்த இந்த விஷயத்தில் மோனிகா தானாகவே தலையை கொடுத்து இப்போது வம்பில் சிக்கி இருக்கிறார். அதை தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்னும் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருப்பது அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.