ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தோல்வி பயத்தை காட்டும் 2 ஹீரோக்கள்.. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி தவிக்கும் சிவகார்த்திகேயன் !

நடிகர் சிவகார்த்திகேயன் வெற்றி, தோல்வி என அடுத்தடுத்து சந்தித்து வந்தாலும் தனக்கான மார்க்கெட்டை ஓரளவுக்கு தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பிரின்ஸ் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் இணைந்து மாவீரன் என்னும் திரைப்படத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் அவருக்கு ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் எப்போதுமே கடின உழைப்புக்கு உதாரணமாக பார்க்கப்பட்டு வருகிறார். ஒரு சின்னத்திரை தொகுப்பாளராக ஆரம்பித்த தன்னுடைய வாழ்க்கையை இன்று முன்னணி ஹீரோவாக மாற்றி இருப்பதற்கு அவருடைய கடின உழைப்பு காரணம் தான். அதையும் தாண்டி அவர் வளர்ந்து வந்த காலகட்டத்தை பார்க்கும் பொழுது வெற்றிடமாக இருந்த ஒரு நேரத்தில் அவருக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல முடியும்.

Also Read: அவரை தூக்கிவிட தான் பத்து தல படத்துல நடிச்சேன்.. சிம்பு உங்களை தூக்கிவிட தான் ஏஆர் ரகுமான் வந்தார் தெரியுமா?

இந்த வெற்றிடத்தை உருவாக்கியவர்கள் இருவருமே மிகப்பெரிய ஹீரோக்கள். சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய தனுஷ், அடுத்தடுத்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிசியானார். மேலும் தமிழில் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. அந்த நேரத்தில் தனுஷ் கொஞ்சம் அடி வாங்கி ஒதுங்கியே இருந்தார். அதனால் அவருடைய இடம் வெற்றிடமாகவே இருந்தது.

தனுஷின் கதை அப்படி இருக்க அதற்கு சமமாக போட்டி போட்டுக் கொண்டிருந்த சிம்பு சினிமாவின் மீது கவனமே இல்லாமல் அப்படியே விலகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். உடல் எடை கூடி சரியாக படப்பிடிப்புக்கு செல்லாமல் தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை கெட்ட பெயர் வாங்கி கோலிவுட்டில் ரெட் கார்டு கொடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் இவர். எனவே இவருடைய இடமும் வெற்றிடமாகி போனது.

Also Read: ஒல்லியான சிம்புவை மறுபடியும் குண்டாக சொன்ன இயக்குனர்.. எரிச்சல் அடைந்து எஸ்டிஆர் செய்த செயல்

சிவகார்த்திகேயன் இந்த சமயத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் தன் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னணி ஹீரோவாக மாறினார். ஆனால் தற்போது இவருடைய நிலைமை கொஞ்சம் பரிதாபமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சிம்பு மற்றும் தனுஷ் இருவருமே விட்டதை பிடிக்க தற்போது களத்தில் இறங்கி விட்டார்கள்.

சிம்பு ஒரு பக்கம் உடல் எடையை குறைத்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இவர் பத்து தல ஆடியோ லாஞ்சில் பேசியதை வைத்தே இவருடைய அடுத்த திட்டங்களை பற்றி கணிக்க முடிகிறது. அதேபோல்தான் தனுஷும், சிம்பு களத்தில் இறங்கியதால் இனி அவருக்கு போட்டியாக வெற்றி படங்களை கொடுத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் வேலை செய்து வருகிறார். இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் பாடுதான் திண்டாட்டம் ஆகிவிட்டது.

Also Read: நயன்தாராவை விடாமல் துரத்தும் சிம்பு.. பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யம்

- Advertisement -

Trending News